விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 121

கணேஷ் காலையில் அவசரமாய் ஓடி வந்து புரொபஸரின் வீட்டுக் கதவைத் தட்டுகிறான். பிறகு நினைவு வந்து அழைப்பு மணியை அடிக்கிறான். புரொபஸர் வந்து கதவைத் திறக்கிறார்.

News image
Updated On :9 ஜனவரி 2018, 5:36 am

ஆர்.அபி​லாஷ்

கணேஷ் காலையில் அவசரமாய் ஓடி வந்து புரொபஸரின் வீட்டுக் கதவைத் தட்டுகிறான். பிறகு நினைவு வந்து அழைப்பு மணியை அடிக்கிறான். புரொபஸர் வந்து கதவைத் திறக்கிறார்.
புரொபஸர்: வாடா... வா
கணேஷ்: என்ன சார் ஆச்சு? ஆஸ்பத்திரிக்கு போகணுமுன்னீங்க. சாப்பிட்டுக்கிட்டு இருந்த அவசரமா இட்லியை பாதியில விட்டு எழுந்து ஓடி I put my skates on sir!
புரொபஸர்: நீ தப்பா சொல்றே
கணேஷ்: இல்ல சார். இப்ப தான் படிச்சேன். வேகமா ஓடி ஒரு இடத்துக்கு வரது தான் I put my skates on.
புரொபஸர்: இல்ல கணேஷ். யாராவது மந்தமா, வேலையை முடிக்காத, பிடிச்ச புள்ளையாராட்டம் இருந்தால் அவங்களை ""எழுந்து போய் வேலையைப் பாரு''ன்னு சொல்றதுக்கு பயன்படுத்துற phrase தான் இது. Put your skates on. அதே போல இன்னமும் உண்டு. Make it snappy. Jump to it. Shift yourself. Shake a leg. Get weaving. இப்படி நிறைய இருக்கு.
கணேஷ்: ஓ... அப்போ நான் சொன்னது தப்பா? நான் எது சொன்னாலும் தப்பு கண்டுபிடிக்கிறீங்க?
புரொபஸர்: அப்படி இல்ல. சொல்லித் தர்றது என் கடமை. சரி Get cracking என்று ஓர் expression உண்டு... கேள்விப்பட்டிருக்கியா?
கணேஷ்: ஆமா... ஆமா
புரொபஸர்: அதோட பொருளும் "சட்டுபுட்டுன்னு ஆகட்டும்' என்பதே.
கணேஷ்: ஓ... சார் cracking என்றால் விரிசல் தானே?
புரொபஸர்: ஆமா. ஒரு கல்லை மாதிரியா அசையாம இருக்கக் கூடிய ஆள் லேசா விரிசல் விழுற அளவுக்கு அடி விழுந்தாத் தான் அடைவான் என்கிற பொருளில் இருக்கலாம்.
அப்போது அங்கே ஜூலி தன் நாவை சுழற்றி வாயைச் சுத்தம் பண்ணியபடி வருகிறது. 
ஜூலி: ஜிலேபி அருமை!
புரொபஸர்: சரி... சரி... ஜூலி வந்தாச்சு நாம கிளம்புவோம்.
கணேஷ்: அட, இதுக்காகத் தான் என்ன இவ்வளவு அவசரமா வரச் சொன்னீங்களா?
புரொபஸர்: ஆமா, ஜூலிக்கு உடம்பு சரியில்ல. 
ஜூலி: அது இருக்கட்டும். நான் பக்கத்து அறையில் இருந்து ஜிலேபி சாப்பிடும் போது நீங்க get cracking எனும் பயன்பாட்டின் தோற்றத்துக்கு சொன்ன விளக்கத்தை கேட்டுக்கிட்டு தான் இருந்தேன். எனக்கு உடன்பாடில்ல. இதுக்கு வேறு ஒரு விளக்கம் உண்டு தெரியுமா?
கணேஷ்: என்ன ஜூலி?
ஜூலி: இரண்டாம் உலகப்போரின் போது தான் இந்த expression தோன்றியது என்கிறார்கள். அதாவது போரில் துப்பாக்கியை எடுத்து "பட்பட்'டுன்னு சுடும் போது ""இது தப்பா சரியா, இதை இப்போ செய்யணுமா பிறகா?'' என்கிற கேள்விக்கெல்லாம் இடமில்லை. எதிரியைச் சுடறது மட்டுமே ஒரே நோக்கம். அது போல மசமசன்னு இருக்கிறவங்க யோசிக்கிறதை நிறுத்தி உடனடியா வேலையில் இறங்கணுமுன் என்று சொல்வதற்காகவே get cracking என சொல்லத் தொடங்கினார்கள். இதே போல உலகப்போரினால் ஆங்கிலத்துக்கு வந்து சேர்ந்த பல சொலவடைகள் உண்டு.
கணேஷ் (ஆர்வமாய்): அப்படியா?
ஜூலி: ஆமா. நாம இப்போ என்ன பண்றோம்?
கணேஷ்: We are talking. இல்ல இல்ல we are chatting. அரட்டை அடிக்கிறோம்.
ஜூலி: கரெக்ட். டிவியில் ஒரு கிரிக்கெட் வீர்ருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கும் போது அவரைப் பேட்டி காண்பதற்கு வர்ணனையாளர் let us have a chat என்று சொல்லித் தான் அழைப்பார் இல்லையா?
கணேஷ்: ஆமா...
ஜூலி: ஆனால் இந்த ண்க்ண்ர்ம்-இன் துவக்கத்தைப் பற்றித் தெரிந்தால் அது எவ்வளவு விநோதமானது, எவ்வளவு gross எனப் புரியும்.
கணேஷ்: Gross என்றால்?
ஜூலி: அருவருப்பானது. 
கணேஷ்: What is your gross salary என்று கேட்கிறார்களே?
ஜூலி: அது வரித்தொகையை கழிக்காமல் மொத்தமான தொகையைக் குறிக்கிறது. அதே போல் வேறு அர்த்தங்களும் உண்டு. பட்டவர்த்தமான ஓர் அநியாயத்தை gross injustice என்பார்கள். சரி நம்ம விசயத்துக்கு வருவோம். Body louse கேள்விப்பட்டிருக்கியா?
கணேஷ்: ம்ஹும்...
ஜூலி: Louse தெரியாதா?
கணேஷ்: lousy கேள்விப்பட்டிருக்கேன். ரொம்ப மட்டமானது. The actor who launched his party gave a lousy speech. 
ஜூலி: அது புரியுது. இது வேறே. பேன் தெரியாது?
கணேஷ்: ஓ...  lice
ஜூலி: Lice என்பது பன்மை. Louse ஒருமை. சரி நம்ம கதைக்கு வருவோம்.
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.