விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 123

உளவியல் ஆலோசகர். நம்மை உட்கார வச்சு ஒரு மணி நேரம் பேச செய்து விட்டு நம்மிடமே அதற்கு 5000 ரூபாய் வசூலிக்கும் புத்திசாலி.

News image
Updated On :23 ஜனவரி 2018, 5:44 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர்: சரி கிளம்புங்க. டைம் ஆச்சு.
கணேஷ்: இப்போ எங்க போறோம்?
புரொபஸர்: என் ஃபிரண்ட் சலபதியைப் பார்க்கப் போறோம்.
கணேஷ்: அதென்ன தகிடதி?
ஜூலி: தகிடதி இல்ல சலபதி. அவர் உங்க சாரோட நண்பர்.
புரொபஸர்: யெஸ். அவன் பேரு வெங்கடாசலபதி. அவன் ஒரு அபாரமான psychiatrist.
ஜூலி: A shrink
கணேஷ்: அப்பிடீன்னா?
ஜூலி: உளவியல் ஆலோசகர். நம்மை உட்கார வச்சு ஒரு மணி நேரம் பேச செய்து விட்டு நம்மிடமே அதற்கு 5000 ரூபாய் வசூலிக்கும் புத்திசாலி.
கணேஷ்: அடப்பாவி. ஆனால் அதென்ன இப்படி ஒரு பெயர்? Shrink என்றால் சுருங்குவது தானே? என் டீ ஷர்ட்டை துவைச்சுப் போட்டால் அது shrink  ஆகும். 
ஜூலி: யெஸ். You always shrink away from shrinks.
கணேஷ்: அதென்ன?
ஜூலி: பயம் அல்லது அருவருப்பினால் சட்டென விலகி நீங்குவது. When the rapist attempted to grab her shoulder, the girl shrank away கற்பழிக்கும் நோக்கத்துடன் அவன் அவள் தோளைப் பற்றிய போது அவள் பதறி விலகினாள்.
ஜூலி: ஏன் உளவியல் ஆலோசகருக்கு அப்படி ஒரு பெயர்? ஏன் shrink?
புரொபஸர்: அதெல்லாம் நீ சலபதி கிட்டயே கேட்டுக்கோ. அவனுக்கு சொல் ஆராய்ச்சியில் ரொம்ப ஆர்வம். வா போகலாம்.
(புரொபஸரின் வண்டியில் கணேஷும் ஜூலியும் ஏறிக் கொள்ள கிளம்புகிறார்கள்)
கணேஷ்: சார்... பசிக்குது...
(புரொபஸர் வண்டியை பாபா பவனில் நிறுத்துகிறார்)
புரொபஸர்: இங்க இட்லி அபாரமாக இருக்கும்
ஜூலி: இட்லியில் என்ன அபாரம்? 
புரொபஸர்: வெள்ளையா நடிகை கன்னம் மாதிரியான இட்லி பார்த்திருக்கியா?
கணேஷ்: கேட்கவே நல்லா இருக்கு. வாங்க...
(இருவரும் ஓட்டலுக்குள் போய் உட்காருகிறார்கள். ஜூலி அவர்களின் டேபிளுக்கு கீழ் படுக்கிறது. 
சர்வர் ஒரு ஆங்கில நாவல் வாசித்தபடியே நடந்து வருகிறான்)
கணேஷ்: சார் ஒரு மார்க்கமா இருக்கு. போயிடலாம்.
புரொபஸர்: தம்பி... ஹலோ...
(சர்வர் வருகிறார். அவர் கையில் இருக்கிற நாவலின் தலைப்பை ஜூலி படிக்கிறது)
ஜூலி: The Girl with the Dragon Tattoo
கணேஷ்: நீ இதைப் படிச்சிருக்கியா?
ஜூலி: ஓ... இது ஒரு துப்பறியும் நாவல். எழுதினவர் ஸ்வீடனை சேர்ந்த ஸ்டியிக் லார்சன். இது ஒரு locked-room mystery.
கணேஷ்: அதென்ன locked-room? பூட்டப்பட்ட அறைக்குள் நடக்கும் வழக்கா?
ஜூலி: இல்லை. இது வேறே. ஓர் அறைக்குள் ஒரு குற்றம் நடக்குது. ஆனால் குற்றத்தின் போது அறை பூட்டியுள்ளது. அங்கே எப்படி குற்றவாளி வந்து வெளியேறியிருக்க முடியும் என புலனாய்வு அதிகாரிகளுக்குப் புரியவில்லை. இறுதியில் இந்த மர்மம் விளக்கப்படும். இது தான் locked-room mystery. ஆருஷி தல்வார் புலனாய்வு வழக்கு ஓர் உதாரணம்.
கணேஷ்: ஓ... Girl என்பது ஒரு cuteஆன சொல் இல்லையா. Woman என்றால் ஒரு மரியாதை, பயம் வருகிறது, ஆனால் ஞ்ண்ழ்ப் இல் அது இல்லை. 
ஜூலி: புரியுது... புரியுது. ஆனால் இந்த வார்த்தை ஆரம்பத்தில் gender neutral ஆக இருந்தது தெரியுமா?
கணேஷ்: அப்படி என்றால்?
ஜூலி: Gender என்றால் பால் அடையாளம். ஆண்பால், பெண்பால். இரண்டு பாலினங்களுக்கும் பொதுவாக இருப்பது தான் gender neutral. Girl என்ற சொல் பழங்கால ஆங்கிலத்தில் "ஓர் இளம் வயது நபர்' எனும் பொருளில் தான் புழங்கியது. பதினாலாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால் உன்னையும் நான் ‘Hey girl'என்று தான் அழைத்திருப்பேன்.
கணேஷ்: அடச்சே... அந்த வார்த்தை மீதிருந்த கிளுகிளுப்பே போச்சு.
புரொபஸர் சர்வரிடம்: என்னப்பா இருக்கு?
சர்வர்: இங்கே உங்களுக்கு கிடைப்பது வேறெங்கேயும் கிடைக்காத புது ஐட்டங்கள் சார்.
புரொபஸர்: என்னென்ன?
சர்வர்: டிபன்?
புரொபஸர்: ம்...ம்
சர்வர்: இட்லி, காப்பி, பொங்கல், பூரி...
புரொபஸர்: தம்பி... தம்பி நிறுத்து இதெல்லாம் ?
சர்வர்: எங்க இட்லி, பூரி, பொங்கல் எல்லாம் கண்ணில் ஒத்திக்கிற மாதிரி சுத்தத்தோட இருக்கும். 
ஜூலி: Much ado about nothing. கேள்விப்பட்டிருக்கியா?
சர்வர் (அதிராமல்): பேசும் நாயை இப்போ தான் பார்க்கிறேன். 
புரொபஸர்: இது என்னோட நாய்...
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.