விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 150

கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள்.

News image
Updated On :31 ஜூலை 2018, 4:30 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். அவர்களுடன் அங்கே ஒரு மீசைக்காரரும் இருக்கிறார்.
கணேஷ் (ஜூலியிடம்): அந்த கொம்பு மீசையைப் பார்த்தியா?
ஜூலி: ஆமா. மீசைக்கு தேங்காய் எண்ணெய் போட்டு திருகியிருக்கிறார். 
கணேஷ்: உனக்கு எப்படித் தெரியும்?
ஜூலி: I can sniff it out.

கணேஷ்: அப்படீன்னா உன்னால அவரோட எண்ணெய் வாசத்தை மோப்பம் பிடித்து அறிய முடியும் என்று தானே?
ஜூலி: ஆமா. ஆனால் அதுக்கு இன்னோர்  அர்த்தமும் உண்டு. 
கணேஷ்: என்ன?
ஜூலி: To discover something / somebody. The new HR executive was so skilful at sniffing out exciting talent in the industry. இது சம்பந்தமா இன்னொரு வார்த்தை நினைவுக்கு வருது. 
கணேஷ்: Recruitment
ஜூலி: அது எல்லாருக்கும் தெரிந்த சொல் - வேலைக்கு ஆள் எடுப்பது. நான் அதை சொல்லவில்லை. Head hunter கேள்விப்பட்டிருக்கியா?
கணேஷ்: மனித வேட்டையாடி தலைகளைச் சேகரிப்பவரா?
ஜூலி: இல்லை head hunters are normal like us. ஆனால் இவர்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தபடி அதன் போட்டி நிறுவனத்துக்கு விசுவாசமாய் இருப்பார்கள். தம் நிறுவனத்தின் சிறந்த திறமையாளர்களைக் கண்டறிந்து அவர்களிடம் பேசிப் பேசி அவர்களை போட்டி நிறுவனத்துக்கு அனுப்பி விடுவார்கள்.
கணேஷ்: கூட இருந்தே குழி பறிப்பவர்கள்.
ஜூலி: ஆமா.
புரொபஸர்: நீ சொல்வது கிட்டத்தட்ட சரி. ஆனால் head hunting என்றால் அது மட்டுமல்ல,  இது ஒரு informal ஆன ஆள் தேர்வு. நீங்களாக வேலைக்கு விண்ணப்பிக்காத நிலையிலும், ஒரு மனிதவளத் துறை அதிகாரி உங்கள் பின்னணியை, திறன்களை அலசி ஆராய்ந்து உங்களைத் தொடர்பு கொண்டு விருப்பம் காட்டினார் என்றால் அது head hunting. பொதுவாய் நிறுவனங்களில் executive பொறுப்புகளில் உள்ளவர்களை வேலைக்கு எடுக்க இம்முறையைப் பயன்படுத்துவார்கள் என்பதால் இதை executive search என்றும் சொல்வார்கள்.
கணேஷ்: அதென்ன சார் executive?

புரொபஸர்: உயரதிகாரிகளை executives  என்பார்கள்.
அப்போது அங்கே ஓர் அழகிய இளம்பெண் வருகிறாள். அவள் ஒரு டால்மேஷன் நாயை அழைத்து வருகிறாள். அந்நாய்க்கு திடீரென மூச்சிரைக்க, கணேஷ் ஒரு கிண்ணத்தில் நீர் மொண்டு அதற்கு அருந்தத் தருகிறான். நாய் நீர் அருந்தியபின் நிதானமாகி சரியாக மூச்சு விடுகிறது. அப்பெண் கணேஷுக்கு நன்றி நவில்கிறாள். தன் பெயர் நடாஷா என்கிறாள்.
கணேஷ்: வணக்கமுங்க. என் பெயர் கணேஷ்
நடாஷா: ஓ நைஸ் நேம். You have a good style.

கணேஷ்: ஸ்டைலா நானா?
நடாஷா: யெஸ். I like your French tuck.

கணேஷ் (நடாஷாவிடம்): நன்றிங்க 
(ஜூலியிடம்): என்ன சொல்றப்பா இந்த பொண்ணு? French kiss தெரியும். இதென்ன French tuck.
ஜூலி: பாதி சட்டையை இன் பண்ணிக்கிட்டு மீதத்தை வெளியே விடுறது.
கணேஷ்: நான் சரியாத் தான் இன் பண்ணினேன். ஆனால் பாதி சட்டை அது பாட்டுக்கு வெளியே வந்திடுச்சு. நானும் அதை கவனிக்கலே. பார்த்தால் அதுவே ஸ்டைலாகிடுச்சு. I am so glad!

நடாஷா: என்ன உங்க நாய் பேசுமா?
கணேஷ்: Yeah, very much. இது என்னோட சொந்த அண்ணன். ஒருநாள் நாங்க சின்ன வயசில் ஒரு மேஜிக் ஷோ பார்க்கப் போயிருந்தோம். அப்போ என்னாச்சுன்னா இவன் அந்த மந்திரவாதியோட தொப்பியை திருடிட்டான். அவர் கடுப்பில இவனை நாயா மாத்திட்டார். அதனாலே இவன் பார்க்கத் தான் நாய், அறிவில் ஒரு மேதை. 
நடாஷா: ஓ அப்படியா? நம்பவே முடியல. I reckon it is a Tinkerbell effect.

கணேஷ் (புரொபஸரிடம்): அதென்ன சார்? (நடாஷாவிடம்): ஓ ஹோ ஹோ you are right!

புரொபஸர் (அவன் காதில்): நம்ப சாத்தியமில்லாத, ஆனால் நமது அதர்க்கமான நம்பிக்கையின் விளைவாக மட்டுமே சாத்தியப்படும் ஒரு விசயம். கிட்டத்தட்ட கேள்வியற்ற நம்பிக்கை.

மீசைக்காரர் போனில் பிக்பாஸ் காணொளி பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நடாஷாவும் எட்டிப் பார்க்கிறாள்.

நடாஷா: இந்த ஷாரிக் பற்றி என்ன நினைக்கிறீங்க?

மீசைக்காரர்:  I think he is an omega male.

கணேஷ்: அப்படீன்னா?

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.