மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 142

ரொபஸர், கணேஷ், ஜுலி, டார்லிங் எனும் நாய் ஆகியோர் செல்லப் பிராணிகளுக்கான உளவியலாளரின் காத்திருக்கும் அறையில் இருக்கிறார்கள்.

News image
Updated On :5 ஜூன் 2018, 10:39 am

ஆர்.அபி​லாஷ்

ரொபஸர், கணேஷ், ஜுலி, டார்லிங் எனும் நாய் ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரின் காத்திருக்கும் அறையில் இருக்கிறார்கள். அவர்களது உரையாடலின் நடுவே டார்லிங் "Sometimes my owner rages on about the ill}effects of alcoholism' எனக் கூற "rages at' என்பதன் பொருள் என்ன என கணேஷ் வினவுகிறான்.

டார்லிங்: Rage என்றால் fury. கணேஷ்: Fury என்றால்?
டார்லிங்: ஒரு டைம்ல ஒரு கேள்வி கேளு. உனக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி நான் டயர்ட் ஆகிடுவேன். 
கணேஷ்: சார்... இது டார்லிங் இல்ல . இது வந்து இது வந்து...
(டார்லிங்கின் உரிமையாளர் பிங்கி): ஐம்ல். நட்ங் ண்ள் ஹய் ண்ம்ல். சொன்னா கேட்காது. பிடிவாதம். பிசாசு.
டார்லிங் இருவரையும் பார்த்து: கிர்ர்ர்ர்
ஜூலி (டார்லிங்குக்கு ஆதரவாக, ஒரு பக்கம் வாலாட்டியபடி): பவ்... வவ்... வவ்... நாய்களின் உணர்வுகளை மதிக்காத பிங்கி மிஷ்ராவின் எதேச்சதிகாரம் ஒழிக.  Down down with the imperialism of pet owners. 
 
டார்லிங் வாலாட்டுகிறது.
கணேஷ் புரொபஸரிடம் ரகசியமாய்: சார்... நான் எதாவது தப்பா சொல்லிட்டேனா? அதென்ன ண்ம்ல்?
புரொபஸர்: அது ஒரு பழைய வார்த்தை. குட்டிப் பிசாசுன்னு அர்த்தம்.
கணேஷ்: குட்டிப் பிசாசே குட்டிப் பிசாசே உன்னால தூக்கம் போச்சே - அந்த பிசாசா சார்?
புரொபஸர்: ம்ம்ம் ரொம்ப குறும்பு பண்றவங்களை ண்ம்ல்ன்னு சொல்வாங்க. Mischievous. ImpI  வினைச்சொல்லாகவும் பயன்படுத்தலாம் - ரொம்ப வித்தியாசமான ஒரு அர்த்தத்தில்.
கணேஷ்: எப்படி? 
புரொபஸர்: பருந்து மாதிரியான வேட்டைப் பறவைகளை பந்தயத்துக்கு பயன்படுத்துவார்கள். அப்பறவைகளை hawk என்பார்கள். இப்பறவைக்கு இறகு ஒடிந்து விட்டால் அதைச் சீரமைக்க வேறு இறகொன்றின் பகுதியை பொருத்துவார்கள். இதை ண்ம்ல்ண்ய்ஞ் என்பார்கள். He imped his hawk as it had been injured in a long arduous flight. ஆனால் பெயர்ச்சொல்லாக இச்சொல்லை ஒருவரை சரியான தொல்லைன்னு சொல்ல பயன்படுத்துவாங்க. இதுவே ஆசாமி குறும்புக்காரர் எனும் பொருள் பட சொல்ல impish என்பார்கள். இது adjective.
கணேஷ்: ஓ... அதனால தான் டார்லிங் கடுப்பாயிடுச்சா?
புரொபஸர்: ம்...ம்...ம்...
கணேஷ்: சார் கடுப்பாகறதுக்கு ஆங்கிலத்தில் என்ன?
புரொபஸர்: Annoyed
கணேஷ்: சரி அதென்ன imperialism? அதை எங்கேயோ கேட்டிருக்கேனே. 
புரொபஸர்: ஜெ.என்.யு. பேராசிரியர்கள் எழுதும் நடுப்பக்க கட்டுரைகளில் பார்த்திருப்பே. 
கணேஷ்: ஆமா American imperialism
புரொபஸர்: ஹா... ஹா... மனப்பாடம் ஆகிடுச்சா? ஆனா அர்த்தம் தெரியாமலே. அமெரிக்க அரசாங்கம் பிற நாடுகள் மீது ஒரு மறைமுக காலனிய ஆதிக்கம் செலுத்துகிறது கவனிச்சிருக்கியா? இந்த வரலாறு நீண்டது. வடகொரியா, லத்தீன் அமெரிக்க தேசங்கள், பாலஸ்தீனம்
முதல் அப்கானிஸ்தான், பாகிஸ்தான் வரை அமெரிக்காவின் படை அணிகளும் குண்டுகளும் தீண்டாத பிரதேசங்களே இல்லை. இது போக, பொருளாதார ரீதியாகவும் அவர்கள் இந்தியா உள்ளிட்ட தேசங்களை ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இப்படி செய்வது தான் imperialism. 
கணேஷ்: அப்போ ஹோட்டல் இம்பீரியல்?
புரொபஸர்: ஆமா ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு இந்த மாதிரி பழங்கால நினைவேக்கம் கொண்ட பெயர் வைப்பது வழக்கம். ஹோட்டல் தாஜ் மாதிரி, ஏதோ அதை ஷாஜஹானே நடத்துகிற மாதிரி. Imperial என்ற சொல்லுக்கு சாம்ராஜ்யத்துடன் தொடர்புடைய எனப் பொருள். சாம்ராஜ்யம் என்றால் empire. அதாவது பல சிறிய நாடுகளை, சிற்றரசுகளை இணைத்து பேரரசாக மாற்றி ஆள்வது. அப்படி ஆள்பவர் சாம்ராட். Emperor நவீன உலகில் இப்படி உலக தேசங்களை ஆக்கிரமிப்பதே imperialism ஆகிறது. Imperial என்றால் royal, regal எனும் பொருளும் வருகிறது.
ஜூலியும் டார்லிங்கும் இந்நேரம் வாலசைத்தபடி கொஞ்சும் நிலையில் இருக்கின்றன.
கணேஷ் (அவற்றை சில நிமிடங்கள் அசந்து பார்த்திருந்து விட்டு புரொபஸரை நோக்கித் திரும்பி): சார் இவங்க ரோமியோ ஜூலியட் ஆகிட்டாங்க. அந்த rage at  என்பதோட பொருளை நீங்க தான் இனி எனக்கு விளக்கணும்.
புரொபஸரும் பிங்கி மிúஷ்ராவும் அந்நேரம் தம்மை மறந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
கணேஷ்: அப்போ நான் மட்டும் தனியா இருந்து என்ன பண்றது?

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.