விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 160

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள்.

News image
Updated On :9 அக்டோபர் 2018, 5:05 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். அப்போது புரொபஸர் ஆங்கிலத்தில் குழப்படியான பேச்சுபாணியை amphibology எனச் சொல்வார்கள் என்கிறார். புரொபஸர் amphibologyக்கான வேறு உதாரணங்களை வழங்குகிறார். அப்போது அவர் frumious எனும் சொல்லைப் பயன்படுத்த அதன் பொருளை கணேஷ் வினவுகிறான். அப்போது குறுக்கிடும் நடாஷா தனக்கு அதன் பொருள் தெரியும் என்கிறாள். அச்சொல் முதலில் பயன்படுத்தப்பட்ட கவிதையில் இருந்து ஒரு வரியை மேற்கோள் காட்டுகிறாள்: Beware the Jubjub bird, and shun the frumious Bandersnatch!
இது கணேஷை மேலும் குழப்புகிறது. அதென்ன ஜுப் ஜுப்? அதென்ன பாண்டெர்ஸ்நாட்ச்? புரொபஸர் விளக்குகிறார்.

புரொபஸர்: இச்சொற்கள் Through the Looking Glass and What Alice Found There எனும் நாவலில் இடம்பெற்ற Jabberwocky எனும் கவிதையில் உள்ளவை. நடாஷா மேற்கோள் காட்டியது அக்கவிதையில் உள்ள ஒரு வரியைத் தான். 
கணேஷ்: ஆலிஸ் என்றால் "அதிசய உலகில் ஆலிஸ்' நாவலில் வரும் ஆலிஸா?
புரொபஸர்: ஆமாம். லூயிஸ் கேரல் அந்நாவலுக்கு ஒரு இரண்டாம் பாகம் எழுதினார். ஒரு sequel. அது தான் மேற்குறிப்பிட்ட நாவல். அதில் ஆலிஸ் ஒரு புத்தகத்தை கண்டடைகிறாள். அதை வாசித்தால் ஒன்றுமே புரியவில்லை. அது எழுதப்பட்டுள்ளது mirror writing பாணியில் என அவளுக்கு பின்னர் விளங்குகிறது.
கணேஷ்: அதென்ன mirror writing?
புரொபஸர்: பின்னிருந்து முன்பாக எழுதுவது. கணேஷ் என்பதை ஷ்ணேக என எழுதினால் புரியாது. ஆனால் அதையே கண்ணாடியில் காட்டினால் அந்த பிரதிபிம்பத்தில் தெளிவாக "கணேஷ்' எனத் தெரியும். இதுவே மிரர் ரைட்டிங். ஆலிஸ் கண்டடைந்த புத்தகம் இவ்வாறு குழப்படியாய் எழுதப்பட்டிருக்க அவள் அதை கண்ணாடி முன் காட்டி படிக்கிறாள். அப்போது அவர் ஒரு nonsense verse என அவளுக்குப் புரிகிறது.
கணேஷ்: அதென்ன நான்சென்ஸ் பாடல்?
புரொபஸர்: ஒரு குறிப்பிட்ட அர்த்தம் புரியும்படி எழுதப்படுவது வழக்கமான பாடல். அர்த்தமின்றி அபத்தமாய் வேடிக்கைக்காக எழுதப்படுவது நான்சென்ஸ் பாடல். Hickory Dickory Dock கேட்டிருக்கே இல்ல?
கணேஷ்: ஆமா சார். நர்சரி பாடல்.
புரொபஸர்: ஆமாம். அது ஒரு நான்சென்ஸ் பாடல். பெரும்பாலான நான்சென்ஸ் பாடல்கள் வேடிக்கையானவை:
I see said the blind man
 to his deaf and dumb daughter
as he picked up
his hammer and saw.
இதைக் கேட்க நமக்கு, " ஐயோ பாவம் அந்த காது கேட்காத, ஊமைப் பெண்ணை இவர் வெட்டி விடுவாரோ' என பரிதாபம் தோன்றும். ஆனால் படிக்க வேடிக்கையாகவும் இருக்கும். நான்சென்ஸ் பாடல்களின் சிறப்பே அவை அர்த்தங்களின் தளைகளை உடைத்து வாசிப்பை மிக சுதந்திரமாய் ஜாலியாய் மாற்றுகின்றன என்பதுதான்.
ஜேபர்வாக்கி கவிதையில் ஆங்கிலத்தின் பல புதிய சொற்கள் அறிமுகமாயின. அதில் ஒன்று frumious. அது furious மற்றும் fuming எனும் சொற்களை இணைத்து உருவான ஒரு புதுச் சொல். Furious என்றால் கடும் கோபம். Fuming என்றால் கோபத்தில் புகைவது. Frumious என்றால் கடுங்கோபத்தில் புகைவது. சிலர் கோபத்தில் பொருமிக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் நிலைமை மிக அவலமாய் இருக்கும். அதுவே frumious. Jubjub bird, Bandersnatch எல்லாம் லூயிஸ் கேரெலே கற்பனையில் உருவாக்கின ராட்சத மிருகங்களின் பெயர்கள். Bandersnatch என்பதில் உள்ள snatchக்கு பறிப்பது எனப் பொருள். தன் பெரிய அலகால் இரையைப் பறித்தெடுத்து தின்னும் மிருகமே Bandersnatch. Jabberwockக்கும் அப்படியான ஒரு மிருகமே. அதைப் பற்றின பாடல் என்பதால் Jabberwocky. 
நடாஷா: புரொபஸர், galumph என்பதும் லூயிஸ் கேரல் உருவாக்கின புதுச் சொல் தானே?
புரொபஸர்: ஆமாம். Galumph என்பது gallop மற்றும் triumph என்பது இணைந்து உருவான சொல். Gallop என்றால் குதிரை வேகமாய் ஓடுவது. Triumph என்றால் வெற்றி. ஆக இவையிரண்டையும் சேர்த்து ஒருவர் வெற்றிவாகை சூடி குதிரையில் கம்பீரமாய் பறந்து வருவதை குறிக்க கேரல் ஒரு புதுச்சொல்லை உருவாக்கினார்: galumph. 
நடாஷா: Chortle மறந்து விட்டீர்களே?
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.