வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 163
புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப் பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள்.


புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப் பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். நடாஷா எனும் பெண் அங்கு காத்திருக்கிறார். உளவியலாளரைச் சந்தித்து விட்டு திரும்ப வரும் ஒரு மீசைக்காரருடன் புரொபஸர் உரையாடும் போது வினைச்சொற்களின் phenomenology குறித்து விவாதம் திரும்புகிறது. பேக்கிலர்ட் எனும் சிந்தனையாளர் emerge எனும் சொல் குறித்து விளக்கியதை புரொபஸர் கணேஷுக்குச் சொல்லித் தருகிறார்.
புரொபஸர்: கணேஷ் நீ சொல்வது சரி தான். ஒரு புது எழுத்தாளன் கவனிப்பின்றி இருக்கிறான். இருட்டில் இருக்கிறான். அவன் ங்ம்ங்ழ்ஞ்ங் ஆகும் போது அவன் நிறைய பேரால் கவனிக்கப்படுகிறான். அவன் நேரடியாக எதன் பின்னிருந்தும் வெளிப்படவில்லை. ஆனால் emerge என்ற சொல் ஓர் உருவகமாகவும் செயல்படுகிறது என்று பேக்கிலர்ட் சொல்கிறார். இளம் எழுத்தாளன் புகழ்பெற்ற எழுத்தாளர்களால் மறைக்கப்பட்டிருக்கிறான், அவன் இருட்டுக்குள் மறைந்திருக்கிறான், ஒரு நத்தை தன் உடலை கூட்டுக்குள்ளிருந்து பாதி வெளியே நீட்டுவது போல இளம் எழுத்தாளனும் தோன்றுகிறான். ஆகையாலே emerge எனும் சொல் பொருத்தமாக இருக்கிறது. இப்படி நத்தை உருவகம் இச்சொல்லின் பின்னே உள்ளது. இதை பேக்கிலர்ட் phenomenology of home}leaving verb என்கிறார். நத்தை ஓடு எனும் ஒன்றையும், கவனிப்பாரற்ற நிலை எனும் ஓட்டையும் இந்த சொல் இணைக்கிறது. நத்தை ஓடு எனும் படிமம் இல்லை என்றால் நம்மால் emerge என்ற சொல்லையே புரிந்து கொள்ள முடியாது. Emerge என்றதுமே நம் மனதில் ஒருவர் எங்கிருந்தோ தலைதூக்கும் சித்திரம் வருகிறது அல்லவா? இச்சித்திரம் இயற்கையை ஒன்றி வாழ்ந்த நம் முன்னோரின் ஆதி மனத்தில் இருந்து தோன்றியது, இச்சொற்கள் வழி நாம் இன்றும் அவர்களைப் போல சிந்திக்கிறோம் என்கிறார் பேக்கிலர்ட். கணேஷ்: சார் அதென்ன confess? நீங்க அவரிடம் so you confessed என்றீர்களே?
புரொபஸர்: ஓ! அது வழக்கமான ஒரு சொல் - குற்றத்தை ஒப்புக் கொள்வது என்பது ஒரு பொருள். பாதிரியாரிடம் ஒருவர் பாவமன்னிப்புக் கோருவது இன்னொரு confess. ஆனால் நான் குறிப்பிட்டது வேறொரு வகை confess. அதாவது to acknowledge something reluctantly.
உதாரணமாய், ஓர் அரசியல் தலைவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டாம் மனைவியின் அந்தஸ்தை அவர் நீண்ட காலமாய் பொதுவில் ஒப்புக் கொள்ளாமலேயே இருக்கிறார். ஆனால் ஒருநாள் அவர் தன் இரண்டாம் துணையை சற்று தயக்கத்துடன் பொதுவெளியில் ஏற்றுக் கொள்ளும் தருணம் வருகிறது. அப்போது he confessed to having a second wife என சொல்லலாம். 2006-இல் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆண்டன் பாலசிங்கம் ராஜீவ் காந்தி கொலைக்குக் காரணம் புலிகள் அமைப்பே என ஒப்புக் கொண்டார். அதை ஒரு மாபெரும் வரலாற்றுத் துயரம் என்றார். A monumental historical tragedy. அந்த குற்றத்துக்கு தாம் வருந்துவதாய் தெரிவித்தார். இதைப் பற்றின செய்தி டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் வெளியான போது We killed Rajiv, confesses LTTE என தலைப்பிட்டார்கள். இங்கே claims என்பதற்குப் பதில் confesses வருவதற்குக் காரணம் புலிகள் அமைப்பு இந்த படுகொலைக்கு பொறுப்பேற்க நீண்ட காலம் தயங்கி வந்தது, 2006 }இல் தான் புலிகள் முதன்முதலில் இதை ஏற்கிறார்கள் என்பது.
கணேஷ்: சார்... அப்புறம் இன்னொரு சந்தேகம். You were under fire from the activists என்று கேட்டீர்களே, இதில் under fire என்பது துப்பாக்கிச் சூடா?
புரொபஸர்: நல்ல கேள்வி கணேஷ். மய்க்ங்ழ் ச்ண்ழ்ங் என்பது ராணுவத் தாக்குதல்களின் புலத்தில் இருந்து வந்த ஒரு ண்க்ண்ர்ம் தான். அதன் மற்றொரு பொருள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாவது. உதாரணமாய்Chetan Bhaghat was under fire from the metoo activists after Ira Trivedi accused him of inappropriate sexual behaviour. சேதன் பகத்தின் பாலியல் அத்துமீறல்கள் குறித்து இரா த்ரிவேதி ஙங்ற்ர்ர் இயக்கத்தின் போது புகார் தெரிவித்திட, பகத் போராளிகளின் கடும் தாக்குதலுக்கு உள்ளானார்.
நடாஷா: அவருக்கு அவசியம் தான். He deserved, though he is an interesting pulp writer. நீங்க அவரோட லேட்டஸ்ட் The Girl in Room 105 படிச்சீங்களா?
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...