விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 155 

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள்.

News image
Updated On :4 செப்டம்பர் 2018, 7:20 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். அவர்களுடன் அங்கே ஒரு மீசைக்காரரும் நடாஷா எனும் பெண்ணும் இருக்கிறார்கள். நடாஷா டாக்டரைப் பார்ப்பதற்கு உள்ளே போகிறார். அங்கு காத்திருக்கும் மீசைக்காரர் புரொபஸரிடம் எதையோ கேட்க முயன்றபடி இருக்கிறார். ஆனால் கணேஷின் குறுக்கீடால் அது நடைபெறாமல் போக மீசைக்காரர் வருத்தமடைகிறார்.

மீசைக்காரர் (கணேஷை சுட்டி): சார் இந்த பையன் சரியான முந்திரிக்கொட்டையா இருக்கிறான். 
புரொபஸர்: ம்ம்ம்....
மீசைக்காரர்: நான் அரை மணியா ட்ரை பண்றேன், ஆனால் என்னை என் சந்தேகத்தைக் கேட்கவே அவன் விடல.
புரொபஸர்: சரி... இப்போ கேளுங்க
மீசைக்காரர்: இந்த முந்திரிக்கொட்டை மாதிரி இருக்கிறவங்களை ஆங்கிலத்தில் என்ன சொல்வாங்க?
புரொபஸர்: அதைத் தான் கேட்க வந்தீங்களா?
மீசைக்காரர்: இல்லீங்க. இது அதைக் கேட்க காத்திருந்த போது தோன்றியது.
புரொபஸர்: பாருங்க... உங்களுக்கே பொறுமை இல்லை. கேட்க வந்தது ஒண்ணு, கேட்டதோ இன்னொண்ணு.
மீசைக்காரர்: சாரி சார்... மன்னிச்சிடுங்க.
புரொபஸர்: சரி, பொதுவா சந்தேகம் கேட்கையில் எல்லாருக்குமே நடப்பது தான் இது. And it is infectious. ஒரு கூட்டத்தில் ஒருத்தர் கேள்வி கேட்டால் அதுவரை அமைதியாய் இருந்த அத்தனை பேருக்கும் மனதில் புதுப்புது கேள்விகள் முளைக்கும். முந்திரிக்கொட்டைகள் சூழ்நிலை சந்தர்ப்பத்தை பொருட்படுத்தாமல் தம்மை முன்னிலைப்படுத்தும் நோக்கில் கருத்து சொல்பவர்கள் அல்லது கேள்வி கேட்பவர்கள். 
மீசைக்காரர்: "கரகாட்டக்காரன்', "சின்ன கவுண்டர்' ஆகிய படங்களில் செந்திலின் பாத்திரம்?
புரொபஸர்: ஆமாம் செந்திலின் பாத்திரம் கிட்டத்தட்ட முந்திரிக்கொட்டை தான். ஆங்கிலத்தில் இந்த குணம் கொண்டோரை presumptuous என்பார்கள். Jumping the gun என்பதும் இதைத் தான் குறிக்கிறது. Cheeky, impudent, impertinent ஆகியவையும் இதற்கு இணையான சொற்கள். அரங்கில் வீற்றிருப்போருக்கு போதிய மரியாதை அளிக்காமல் பேசுவது mpertinent.
கணேஷ்: பிக்பாஸில் ஐஷ்வர்யா?
புரொபஸர்: ஆமாம் கிட்டத்தட்ட. Impudent, insolent என்றாலும் இதே தான். ஆனால் இதையே சற்றே சுட்டித்தனமாய் செய்தால் அது cheeky என சொல்லப்படும். முந்தின பிக்பாஸில் ரைஸாஇப்படி இருந்தார். She was cheeky. கிரிக்கெட்டில் நீங்கள் ஸ்லிப்புக்கு மேலாக ரேம்ப் ஷாட் அடித்தால் அதை cheeky என்பார்கள். இப்படி வீம்பாக பேசித் திரிந்தால் they call you a cheeky monkey.
கணேஷ்: அதென்ன monkey? குரங்கு மாதிரி விளையாட்டுத்தனமாய் இருக்கிறான் என்றா?
புரொபஸர்: ஆமா. 
அப்போது அங்கே வின்னி எனும் ஒரு பன்னிரெண்டு வயதுப் பெண் தன் பாட்டியுடன் வருகிறாள். இருவரும் அமர்கிறார்கள்.
பாட்டி: பளீஸ்... யாராவது ஏஸியைக் குறைக்க முடியுமா?
வின்னி: Yes it is cold enough to freeze the balls of a brass monkey.
கணேஷ்: but…
வின்னி: what?
கணேஷ்: அந்த idiom.... அதை ஒரு பெண் சொல்லக் கூடாதல்லவா? It doesn't make any sense.
வின்னி: Who said? It makes perfect sense. 
புரொபஸர்: அந்த சொற்றொடரைப் பொறுத்தமட்டில், அது குரங்கின் உடலுறுப்பைப் குறிக்கவில்லை.
கணேஷ்: பிறகு?
புரொபஸர்: பழைய கப்பல்களில் brass rack எனும் பித்தளை அலமாரிகள் உண்டு. இவற்றை monkey என சொல்வார்கள். இந்த கப்பல்களில் கடற்கொள்ளையரிடம் இருந்து பாதுகாப்புக்காக பீரங்கிகள் வைத்திருப்பார்கள். இந்த பீரங்கிகளின் குண்டுகளை cannon என சொல்வார்கள். இந்த குண்டுகளை ரேக்கில் அடுக்கி வைத்திருப்பார்கள். இவை தான் balls of a brass monkey. கடுங்குளிரில் இந்த பித்தளை அலமாரிகள் இறுகும். அவை இறுகும் போது குண்டுகள் தெறித்து வெளியே புறப்பட்டு ஓடும். அதாவது திடீரென பெரிய ஒலியுடன் பீரங்கியில் இருந்து புறப்பட்டது போல வெளிக்கிளம்பும். இந்த சம்பவத்தை சுட்டும் வகையில் கடுங்குளிரை it is cold enough to freeze the balls of a brass monkey என குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது.
வின்னி: That's interesting.
மீசைக்காரர்: என் ஒரிஜினல் கேள்வியைக் கேட்டு விடுகிறேன். இப்போது விட்டால் பிறகு வாய்ப்பு கிடைக்குமோ என்னவோ? மீசையை முறுக்குவதை ஆங்கிலத்தில் என்ன சொல்வார்கள்? என்னுடைய படம் ஒன்றை பேஸ்புக்கில் பதிவேற்றுகையில் caption எழுதத் தேவைப்படுகிறது.
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.