வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 180
புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.


புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்களும் நடாஷா எனும் பெண்ணும் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது fulsome என்ற சொல்லுக்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு உண்டு என புரொபஸர் சொல்ல அதை அறிவதற்கு சேஷாச்சலம் ஆர்வம் கொள்கிறார்.
புரொபஸர்: Fulsome என்றால் மிகுதியான என்ற அர்த்தத்தில், abundant என்று பயன்படுத்துகிறார்கள். அவ்வாறே அதைச் சிலர் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்த அர்த்தம் ரொம்ப பழமையானது. இன்று பாராட்டைக் குறிக்கவே ச்ன்ப்ள்ர்ம்ங் என்பதை அதிகமும் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக, themother-in-law showered her with fulsome praise after relishing the delicious sambar rice served with vada and payasam.
சேஷாச்சலம்: வாஹ்...
ஜூலி: ரெண்டு பேரும் சேர்ந்திட்டா சாம்பாரை விட்டு வெளியே வர மாட்டீங்க. அடச்சே...
புரொபஸர்: ச்சூ! ஆனால் Julie was salivating fulsomely என்றும் சொல்லக் கூடாது.
ஜுலி: In fact, I hardly salivate!
புரொபஸர்: சரி... இருக்கட்டும். நான் சொல்ல வந்தது அப்படி உடலுக்கோ உணவுக்கோ அச்சொல்லை பயன்படுத்துவது இன்று தப்பு.
ஜூலி: நான் ஒரு விசயம் கேட்கணும். நீங்க சொல்றது போல அல்லாமல் abundance, plentiful எனும் பொருளும் இச்சொல்லுக்கு உள்ளதே. நான் அகராதியில் நேற்று கூடப் பார்த்தேன். சிக்கனைப் பற்றி யோசித்த போது எனக்கு ஒரு பெரிய பீஸாக இருந்தால் நல்லா இருக்குமேன்னு தோணியது. அப்போது தான் big fulsome pieceன்னு நினைச்சேன். அகராதியில் பார்த்தேன். ரெண்டு அர்த்தங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. ஒன்று மிகையான புகழ்ச்சி; இன்னொன்று முழுமையான பூரணமான புஷ்டியான உடலமைப்பு என்கிற ரீதியில். சரி தானே?
புரொபஸர்: ஆமாம். ஆனால் that sense of the word is obsolete now. அதாவது அந்த அர்த்தம் காலாவதி ஆகிடுச்சு. உதாரணமா, இன்னிக்கு நீங்க ஒருத்தரை நோக்கி ஜென்டில்மேன் என்று சொன்னால் அதன் பொருள் வேற. கண்ணியமான பொறுப்பான சமூக மதிப்புள்ளவர்னு அர்த்தம். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை கனவான் என்ற அர்த்தம் அதற்கு இருந்தது. அன்று நிலவுடைமையாளர்களின் இயல்பை, சுபாவத்தை, அணுகுமுறையை குறிப்பிட்ட genteel என்ற சொல் பயன்பட்டது. அதாவது genteel meant a behaviour typical of the high social class. That is having an aristocratic quality. அதாவது belonging to the landed gentry.
கணேஷ்: அப்படியென்றால் என்னைப் போன்ற நிலமற்றவர்கள் எல்லாம் முரடர்களா?
புரொபஸர்: ஆம். ஒரு காலத்தில் ஐரோப்பாவில் ஒருவரது சமூக அந்தஸ்து அவரது நிலவுடைமையால் அறியப்பட்டது. அத்தகைய நிலவுடைமையாளர் மேம்பட்ட இயல்பும் திறனும் கொண்டவர் என நம்பப்பட ஜென்டில்மேன் எனும் பொருள் அச்சொல்லுக்கு வந்தது. They were called the polite society, அதாவது கண்ணியமான சமூகம் என அவர்கள் அறியப்பட்டனர். ஆனால் காலம் விரைவில் மாறியது. இருபதாம் நூற்றாண்டில் முதலாளித்துவமும் தொழிலுற்பத்தி யுகமும் தோன்ற நிலவுடைமை வர்க்கம் மதிப்பிழந்தது. அதன் பின்னர் அவர்களில் தொழில் உற்பத்தியில் ஈடுபடாத சிலர் பணமற்றவர்களாகவும் ஆகினர். இத்தகையோர் பார்க்க பந்தாவாக இருப்பார்கள், ஆனால் வீட்டில் அடுப்பெரியாது. சட்டைப் பையில் பணமிருக்காது. இவர்களைத் தான் சார்லி சாப்ளின் தன் படங்களில் தன் தோற்றம் வழியாக (தொப்பி, அங்கி, கைத்தடி சகிதம்) பகடி செய்தார். ஆனால் இன்று எல்லாரும் ஞ்ங்ய்ற்ப்ங் ஆக இருக்கலாம் எனும் நிலைமை ஏற்பட்டுள்ளது. யாராலும் உழைத்துச் சம்பாதித்து சமூக அந்தஸ்தைப் பெற முடியும். அத்தகையோர் இனிமையாய் மரியாதையாய் கனிவாய்ப் பழகக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக, ஜாம்பஜார் மார்க்கெட்டில் வாழும் மக்களும் அடையாறு மக்களும் இருவிதமாய் இருப்பார்கள், தம்மை காட்டிக் கொள்வார்கள். இன்று யார் வேண்டுமெனிலும் ஜென்டில்மேன் ஆக முடியும் என்பதால் ஜென்டில் என்ற சொல்லின் பொருளும் கூட இன்று மாறி விட்டது. இன்று ஏற்கெனவே குறிப்பிட்ட ஜென்டில்மேனின் பொருள் காலாவதி ஆகி விட்டது. Fulsomed-கும் அதுவே நடந்தது. Plenty, abundant -எனும் அர்த்தத்தில் அதை பயன்படுத்துவது இன்று தப்பு.
நடாஷா: குறுக்கிடறதுக்கு மன்னிக்கணும். உயர் வர்க்க பெண்களை lady என்று அழைத்தார்கள். அதை ஒட்டின சொற்கள் இன்று புழக்கத்தில் உண்டா?
புரொபஸர்: Yes lady!
கணேஷ்: ஆனால் அவங்களுக்கு பூர்வீக நிலமோ சொத்துபத்தோ இல்லையே?
புரொபஸர்: ஆமா. ஆனால் she can still be a lady. எப்படீன்னு சொல்றேன்.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...