வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 175
புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.


புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா எனும் பெண்ணிடம் நட்பாகிறார்கள். நால்வரும் மருத்துவரின் அறையில் உரையாடுகிறார்கள். உளவியலாளர் சேஷாச்சலம் ஆங்கில இலக்கியமும் கற்றவர் என்பதால் அவர் சில ஆங்கில சொற்றொடர்களை விளக்குகிறார். அவர் break down பற்றி பேசுகையில் நடாஷாவுக்கு ஐயம் எழுகிறது.
நடாஷா: டாக்டர், நீங்கள் பயன்படுத்திய break down என்பது எனக்கு உடன்பாடாக இல்லை.
சேஷாச்சலம்: ஏன்?
நடாஷா: டாக்டர், பிரேக் டவுன் என்பது நம்முடைய மனநிலைக்கு நடக்கும் ஒன்று. இல்லையா?
சேஷாச்சலம்: ஆமா.
நடாஷா: பிரேக் டவுன் என்பது உடைபடுவது. எது உடைபடும்? ஒரு கட்டடம், ஓர் அமைப்பு, ஒரு பொருள் உடையலாம். அதே போன்று, ஓர் எந்திரம் வேலை செய்யவில்லை என்றால் அதுவும் பிரேக் டவுன் தான். ஒரு பேருந்து பிரேக் டவுன் ஆகும். இல்லயா?
சேஷாச்சலம்: யெஸ்.
நடாஷா: இதில் இருந்து நீங்க என்ன சொல்ல வர்றீங்க? என்னுடைய மனம் ஓர் எந்திரம் அல்லது ஒரு கட்டமைப்பு என்று சொல்ல வர்றீங்களா? நான் என்ன ரோபோவா?
சேஷாச்சலம்: நல்ல கேள்வி நடாஷா. பிரேக் டவுன் என்பது வினைச்சொல்லாகவும் பெயர்ச்சொல்லாகவும் பயன்படுகிறது. இதில் பெயர்ச்சொல்லில் break மற்றும் down சேர்ந்து breakdown என ஒன்றாக வரும். இதற்கு வெவ்வேறு அர்த்தங்கள் உண்டு. நான் ஏற்கெனவே அவற்றை விளக்கினேனே. உதாரணமாய் ஒருவருடைய மனம் உடைந்து போகும் போது he breaks down. இந்த சொல்லே அமைப்பு, எந்திரம், கட்டடம் ஆகிய பொருட்களில் இருந்தே வருகின்றன. ஒரு பொருளை உடைத்து கீழே தனித்தனியாய் எடுத்து வைப்பது. ஒரு பில்டிங் பிளாக் அமைப்பின் துண்டுகளை தனித்தனியாய் பிரிப்பது போல. இந்த சித்திரத்தில் இருந்து தான் they broke down at the court when the sentence was read out என்கிற வாக்கியம் வருகிறது. ஒரு கட்டடத்தில் இருந்து செங்கற்களை உருவுவது போல இது. வெவ்வேறு இடங்களில் இருந்து கற்களை பெயர்த்து எடுத்ததும் என்னவாகும்? கட்டடமே சரியும். உடைந்து விழும். மனித மனமும் இப்படியே உருக்குலைகிறது. நம்மை பல்வேறு எண்ணங்கள், நம்பிக்கைகள், சமூக கட்டமைப்புகள் இணைந்து ஓர் உருவகமாக மாற்றி வைத்துள்ளது. இவை இல்லையென்றால் நாம் சிதறி விடுவோம். உதாரணமாக, புரொபஸருக்கு நீ, கணேஷ், அவரது மாணவர்கள், அவரது நாய், எல்லாரையும் விட முக்கியமாக அவரது மனைவி மீனாட்சி, என்னுடைய வகுப்புத் தோழியான மீனு, இந்த செங்கற்களைப் போல. இவர்கள் விலகி விட்டால் அவர் நொறுங்கி விடுவார். அவருக்கு உளப்பிரச்னை ஏற்படும். இதை உளவியலில் இந்த அணுகுமுறையை psychotherapy என்பார்கள். தெரியுமென நினைக்கிறேன். உளச்
சிகிச்சை.
நடாஷா: ஆமா.
ஜூலி: நீங்கள் ஒரு மணிநேரம் பேசுவதை தலையாட்டி கேட்டு விட்டு அதற்கு கட்டணமாய் ஐயாயிரம் ரூபாய் வாங்குபவரே ல்ள்ஹ்ஸ்ரீட்ர்ற்ட்ங்ழ்ஹல்ண்ள்ற்.
சேஷாச்சலம்: Not entirely. நான் விளக்குகிறேன். Psychotherapy is a treatment method where you don’t treat a mental disorder with medicines அதாவது பேசியே, ஒருவர் பேசுவதைக் கேட்டே, அவரை சரி பண்ணுவது. A kind of talking therapy. இன்று நாம் நிறைய பேசுகிறோம். ஆனால் யாரும் யாருக்கும் காது கொடுப்பதில்லை. நாங்கள் உளவியலாளர்கள் அதை செய்கிறோம். மனிதன் தடையின்றி பேசினாலே அவனது பாதி பிரச்னைகள் சரியாகி விடும். சரி, இப்போது நீ கேட்டதற்கு வருகிறேன். Psychotherapy நாங்கள் மனிதனை ஓர் எந்திரமாக பார்ப்பதில்லை. உரையாடலுக்கும் உறவுகளுக்கும் அங்கு மதிப்பளிக்கிறோம். இப்படி செய்பவர்களை psychologist என்கிறார்கள். இவர்கள் மருந்து எழுத மாட்டார்கள். மாறாக, psychiatrist என்பவர்கள் உளவியல் கற்ற மருத்துவர்கள். அவர்கள் மனித மனத்தை நரம்பணுக்களின் கூட்டிணைவாகப் பார்க்கிறார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில், நரம்பணுக்களால் உண்டான ஒரு கட்டடமே மனம். செங்கற்கள் நடுவே உள்ள சிமெண்ட் பெயர்ந்து போனதும் கூரையில் ஓட்டை விழுகிறது. மழையின் போது நீர் கசிகிறது. நீங்கள் ஒரு கொத்தனாரை அழைத்து வருகிறீர்கள். அவர் என்ன செய்வார்? சிமெண்டால் ஓட்டையை அடைப்பார். கூரையின் அமைப்பில் அடிப்படையான பழுதுகள் இருந்தால் அவற்றை சுட்டிக் காட்டி தீர்வுகளைப் பரிந்துரைப்பார். ஒரு psychiatrist பொருத்தமட்டில் இந்த சிமெண்ட் என்பது synapse. புரிகிறதா?
நடாஷா: இல்லை.
சேஷாச்சலம்: விளக்குகிறேன்.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...