கடைக்கே போக வேண்டியதில்லை!
கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால், யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும்படி அரசு மக்களைக் கேட்டுக் கொண்டது.


கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால், யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும்படி அரசு மக்களைக் கேட்டுக் கொண்டது. என்றாலும் தேவைப்படும் பொருட்களை வாங்க வெளியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், கடைவீதிகளில், சந்தைகளில் கூட்டம் கூடுவதும், ஒருவருக்கொருவர் தகுந்த இடைவெளிவிட்டு நிற்காமல் இருப்பதும் வழக்கமாக உள்ளது.
வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், காய்கறிகள், மருந்துகள் வீட்டுக்கே வந்துவிட்டால் வெளியே தேவையில்லாமல் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கலாம் அல்லவா? இதற்காக கர்நாடக மாநில அரசு ஒரு புதுத்திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறது. முதற்கட்டமாக கர்நாடகத் தெற்கு பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட நகர்ப்புற மாவட்டங்களில் அறிமுகம் செய்திருக்கிறது.
உங்களுக்குத் தேவையான பொருள்களை 08061914960 என்ற எண்ணுக்குப் போன் செய்தோ, வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியோ சொன்னால் போதும். அவை உங்கள் வீடு தேடி வந்துவிடும்.
ஏற்கெனவே உணவகங்களில் இப்படித்தானே ஆர்டர் செய்து வீட்டிலிருந்தபடியே சாப்பிட்டோம் என்று கேட்கிறீர்களா? தனிப்பட்ட உணவகங்கள் தங்களுடைய விற்பனைக்காக உணவுப் பொருள்களைக் கொண்டு செல்லும் ஆட்களை இதற்காக நியமித்திருப்பார்கள். இதில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
ஆனால் அதிகமான மக்களுக்குப் பொருள்களைக் கொடுக்க வேண்டும் என்பதால், அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளைச் செய்ய வேண்டியிருக்கிறது.
நகர்ப்புற மாவட்டங்களில் வாழும் ஒருவர் தனது செல்போன் மூலம் தனக்குத் தேவையான பொருள்களைச் சொன்னவுடன், இந்தச் செயலி அந்த நபர் வாழும் பகுதியில் உள்ள கடைகளுக்கு அவற்றைத் தெரிவித்துவிடுகிறது. கடைகளில் தரப்படும் பொருள்களை ஏற்கெனவே இத்துறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் Dunzo, Rapido, HouseJoy, Shadowfax, Swiggy ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்துவிடுகிறார்கள். இதற்காக மொத்தம் 16 ஆயிரம் பலசரக்கு, மருந்து, காய்கறி, பழக்கடைகள் இணைப்பில் இருக்கின்றன. இந்தப் பொருள்களை வீட்டிற்குக் கொண்டு வந்து தர 3 ஆயிரம் தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
வீட்டிற்குக் கொண்டு வந்து தருவதால், எக்கச்சக்கமாக டெலிவரி கட்டணத்தைக் கேட்பார்கள் என்று நினைத்துப் பயப்பட வேண்டாம். டெலி வரி கட்டணம் ரூ.10 தந்தால் போதும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...