வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 255
ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபர கேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.


ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபர கேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப் பேரரசின் சக்கரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். ஒரு சின்ன விசயத்துக்காக வீரபரகேசரி கணேஷிடம் கோபித்துக் கொள்கிறார். அவர் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக, அவன் தலை உடனே கொய்யப்படுமென கட்டளை பிறப்பிக்கிறார். கணேஷ்
மன்னிப்புக் கோர, அவர் அவனிடம் பத்து கேள்விகள் கேட்கப் போவதாகச் சொல்கிறார். அதில் ஒன்பதுக்கு சரியாகப் பதிலளித்தால் அவன் தலை தப்பும்.
இக்கேள்விகளுக்கான பதில்களை கணேஷ் ஜூலியுடன் விவாதித்து சரியான பதில்களைத் தந்து சமாளிக்கிறான். ஆனால் வீரபரகேசரியோ பொழுதுபோக்குக்காக தான் கேள்விகள் கேட்பதைத் தொடரப் போவதாக சொல்கிறார். அதற்கு அவன் சரியாகப் பதிலளிக்காவிடினும் ஆபத்து ஒன்றும் இல்லை.
இப்போது மன்னரின் வெண்புரவியான ஷா ஒரு கேள்வியைக் கேட்கிறது: eggplant என ஏன் கத்தரிக்காய் அழைக்கப்படுகிறது? கத்தரிக்காய்க்கும் முட்டைக்கும் என்ன தொடர்பு?
கணேஷ் (புரொபஸரிடம்): சார், நான் உங்களைத் தான் இப்பவும் நம்பியிருக்கேன். ஏன் சார் கத்தரிக்காயில் போய் முட்டையை வச்சாங்க?
புரொபஸர்: அதுவா, நீ பார்த்தேன்னா கத்தரிக்காய் பார்க்க முட்டையின் வடிவில் இருக்கும். அதுதான்டா காரணம்.
ஜூலி: He is pulling your leg..
கணேஷ்: ஆங்?
ஜூலி: உன்னைக் கலாய்க்கிறாருன்னு சொல்றேன்.
கணேஷ்: சார்...
புரொபஸர்: நிஜமாவே தான் சொல்றேன்டா. அதாவது இந்த கத்தரிக்காயில் வெள்ளை நிறத்தில் ஒன்று இருந்தது. அதைப் பார்க்க முட்டை போலவே இருக்கும். அதனால்தான் மக்கள், "அட, முட்டை போலவே ஒன்று விளையும் செடி' என நினைத்து இதற்கு முட்டைச்செடி எனும் பொருளில் eggplant என பெயரிட்டார்கள். ஆனால் அதன் பின்னர் ஊதா நிற கத்தரிக்காய் அதிகம் புழக்கத்துக்கு வந்தது. இருந்தாலும் அந்த பெயர் நிலைத்து விட்டது.
கணேஷ்: அட, இப்படி ஒரு கதை இதுக்குப் பின்னாடி இருக்குதா?
புரொபஸர்: ஆமா. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் இதை eggplant என்று சொல்வார்கள். தெற்கு ஆசியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் brinjal என்கிறார்கள்.
கணேஷ்: ஏன் இந்த வித்தியாசம்?
புரொபஸர்: Brinjal என்பது பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட சொல். காலனிய ஆதிக்கம் காரணமாக தெற்காசியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இச்சொல் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் காலனிய தாக்கம் அமெரிக்காவில் இல்லாததால் அவர்கள் eggplant என சொல்கிறார்கள்.
வீரபரகேசரி: எனக்கு நாக்கில் எச்சில் ஊறுகிறது. (கையைத் தட்டுகிறார்) அடேய் லகுட பாண்டிகளா?
சமையல்காரர்கள் இருவர் ஓடி வருகிறார்கள்: மன்னர்... மன்னா
வீரபரகேசரி: இன்று மதிய விருந்துக்கு என்னடா தயார் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்?
சமையல்காரர்: மன்னர் மன்னா, உங்களுக்குப் பிடித்த நூடுல்ஸýம், சில்லி சிக்கனும். அதற்கு அடுத்து...
வீரபரகேசரி: நிறுத்து.. நிறுத்து... எதிரிகள் நம்மைத்தாக்கும் போது யாரைக் கேட்டு அந்நிய உணவுகளைத் தயாரிக்கிறாய்? இனிமேல் நம்நாட்டு உணவுகளை மட்டுமே சமைக்க வேண்டும். கத்தரிக்காயை அழகாய் துண்டுதுண்டாய் நறுக்கி நெய்யில் வதக்கி கொத்ஸý பண்ணு.
சமையல்காரர்: கட்டளை மன்னா.
கணேஷ் ஜூலியிடம்: அதென்ன desi?
ஜூலி: உள்ளூர், சுதேசி. Local, indigenous என்பதை ஆங்கிலத்தில் இதற்கு மாற்றுச்சொற்கள்.
வீரபரகேசரி: அமைச்சரே, "நாமே உற்பத்தி செய்து நாம் மட்டுமே உண்ணுவோம் இயக்கம்' என ஒன்றை இப்போதே அறிவிக்கிறேன். இனிமேல் நாட்டில் யாரும் நூடுல்ஸ் சாப்பிடக் கூடாது.
அமைச்சர்: தங்கள் உத்தரவு மன்னா. ஆனால் மன்னா, நூடுல்ஸ் வியாபாரிகள் சங்கம் நமக்கு மாதம் பல லட்சம் ரூபாய் வரியாகக் கட்டு
கிறார்கள். தடை என்றால் அவர்கள் கோபித்துக் கொள்வார்கள்.
வீரபரகேசரி(கணேஷிடம்): மற்றொரு கேள்வி: Aubergine என்றால் என்ன?
கணேஷ்: மன்னா எனக்கு எக் புர்ஜி தான் தெரியும். ஒருவேளை எக் புர்ஜியில் கத்தரிக்காயை வதக்கி சேர்க்கிறபதார்த்தமோ?
ஜூலி: உளறாதே. Aubergine என்றால் பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் கத்தரிக்காய்.
கணேஷ் (பெருமூச்சு விடுகிறான்): இந்த கத்தரிக்காய் இவர்களிடம் சிக்கிப் படும் பாடு!
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...