இமெயில்!
உண்மையான அறிவியல் அமைத்துத் தரும் சுதந்திரம் மட்டுமே நமக்குப் புதிய விதிகள், கருத்துகள், புதிய கண்டுபிடிப்புகளைச் சாத்தியமாக்குகிறது. அக்கண்டுபிடிப்புகள் பிரச்னைகளை அடையாளம் காண உதவுகின்றன.


உண்மையான அறிவியல் அமைத்துத் தரும் சுதந்திரம் மட்டுமே நமக்குப் புதிய விதிகள், கருத்துகள், புதிய கண்டுபிடிப்புகளைச் சாத்தியமாக்குகிறது. அக்கண்டுபிடிப்புகள் பிரச்னைகளை அடையாளம் காண உதவுகின்றன.
அதிலிருந்தே நமது ஆரோக்கியம், நமது நாடு, நமது உலகம் ஆகியவற்றுக்குத் தேவையான உண்மையான தீர்வுகள் பிறக்கின்றன.
அலுவலகங்களுக்கிடையேயான தகவல் தொடர்பிற்கான காகிதப் போக்குவரத்தில் உழன்று கிடந்த ஊழியர்கள் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் இருந்த பிரச்னைகளுக்குத் தீர்வாக அமைந்ததே என் இமெயில் கண்டுபிடிப்பு. இக்கண்டுபிடிப்பு அவர்களைப் பல சுமைகளிலிருந்து விடுதலை அடையச் செய்தது.
விஞ்ஞானிகளுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் மட்டும்தான் என்றிருந்த கணினி, இமெயில் கண்டுபிடிப்பிற்குப் பிறகு சாமானியர்களைத் தட்டச்சு எந்திரங்களிலிருந்து எழுத்துரு பலகை (கீ போர்டு)க்கு மாற அனுமதித்தது.
பதினான்கு வயது தமிழ் - இந்தியக் குடியேறிச் சிறுவன் - முகவூர் என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் பேரன், மேற்சொல்லப்பட்ட செயலாளர்களை ஒரு போதும் குறைத்து மதிப்பிட்டதில்லை. என்னைப் பொருத்தவரை அவர்கள் என் பாட்டன்மார்களைப் போலவே உழைக்கும் மக்கள். அவர்களைத் தொழில்நுட்பம் மூலம் விடுவிக்க எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது, அவ்வளவே.
தொழில்நுட்பத்தை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மக்களை நாம் தினமும் எப்படிப் பழக்கி வருகிறோம் என்பவைதான், நாம் இன்னும் கலியுகத்திலேயே இருந்து கொண்டிருக்கிறோமா என்பதைத் தீர்மானிக்கும்.
விஜய் ராணிமைந்தன் எழுதிய "இமெயில் தமிழன்' என்ற நூலிலிருந்து...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...