மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வாடகை மினி கார்! 

சிங்கப்பூரில்  புளூஎஸ்ஜி என்ற வாடகைக் கார் ஏற்கெனவே பயன்படுத்தப்படுகிறது.  

News image
Updated On :18 ஆகஸ்ட் 2020, 12:30 am

என்.ஜே.


சிங்கப்பூரில்  புளூஎஸ்ஜி என்ற வாடகைக் கார் ஏற்கெனவே பயன்படுத்தப்படுகிறது.  அடுத்த ஆண்டு சிங்கப்பூரில் புங்க்கோல் பகுதியில் "மினி' வாடகை கார் சேவை தொடங்கப்பட  உள்ளது.    க்யூஐக்யூ  குளோபல் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த மினி காரில்  இருவர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.  2.4 மீட்டர் நீளமும், 1 மீட்டர் அகலமும் உள்ள இந்த கார்,  மின்சக்தியால் இயங்கக் கூடியது. 

7 நிமிடங்கள் இந்த காரை சார்ஜ் செய்தால் 25 கி.மீ. வரை ஓடும்.  அதிகபட்ச வேகம்,  மணிக்கு 45 கி.மீ.  இந்தக் கார் ஓட்டுநர் இல்லாமலும் கூட  தானாக இயங்கக் கூடியது.  ஜிபிஎஸ் சிஸ்டமும்,  காரில் உள்ள கேமராவும் அதற்கு உதவுகின்றன.   

இந்த மினி காரை சார்ஜ் செய்வதற்காக நகரின் பல பகுதிகளில் சார்ஜ் செய்யும் மையங்கள் தற்போது  அமைக்கப்படுகின்றன. 

இதில் அரை மணி நேரம் பயணம் செய்தால் 2 சிங்கப்பூர் டாலர் வாடகையாகத் தர வேண்டும். 

கரோனா காலத்தில் மினி வாடகைக் காரா? என்று கேட்கிறீர்களா?  இந்த மினி காரை அடிக்கடி புற ஊதாக் கதிர்களைப் பயன்படுத்தி  தூய்மைப்
படுத்தப் போகிறார்கள். பயப்படத் தேவையில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.