கூகுள் தேடலில் இடம் பெற...
ஒருவர் உலகில் புகழ் பெற்று வாழ்ந்தார் என்பதை அவருக்கு பின்னால் வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள புத்தகங்கள் உதவின.


ஒருவர் உலகில் புகழ் பெற்று வாழ்ந்தார் என்பதை அவருக்கு பின்னால் வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள புத்தகங்கள் உதவின.
ஆனால், தற்போது அந்தப் புத்தகங்கள் இணையதளத்தில் டிஜிட்டல் முறையில் எளிமையான தேடலில் கிடைக்கின்றன.
உலகில் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இணையதளம் இருந்தால்போதும், பிரபலமானவர்களின் ஏதோ ஒரு குறிப்பை கூகுள் தேடலின் மூலம் பெற்றுவிடலாம்.
அப்படிப்பட்ட கூகுள் தேடலில் தற்போது சாதாரண மனிதர்களின் பெயரும் இடம் பெறும் வகையில் மக்கள் அட்டை (பீப்பிள் கார்ட்ஸ்) எனும் புதிய சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இணையதளத்தில் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாகக் கருதப்படும் இந்தியாவில் மட்டும்இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
வெறும் ஒரு கூகுள் கணக்கு இருந்தால்போதும் உங்களின் சொந்தக் குறிப்பை எழுதி இணைத்துவிடலாம். இதை பிறர் கூகுள் தேடலின் மூலம் உங்களைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
தற்போது, ஆங்கில மொழியில் மட்டும் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ஓர் அட்டை மட்டும் உருவாக்கமுடியும்.
தங்களைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களைப் பொது வெளியில் பகிர்ந்து கொள்ள கூகுள் நிறுவனம் வழங்கி உள்ள இந்த சேவையில், சிலர் தவறான தகவல்களை இணைத்திருந்தால் அதைப் பற்றி புகார் அளிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டையை எப்போது வேண்டுமானாலும் அழித்துவிடவும் முடியும்.
"பீப்பிள் கார்ட்ஸ்' சேவையைச் செயல்படுத்த வேண்டுமானால் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் கணக்குக்குள் செல்ல வேண்டும். அங்கு "ஆட் மீ டூ ஸர்ச்' என டைப் செய்து உள்ளே நுழைந்து உங்கள் பெயர், இடம், சிறு குறிப்பு, பணி, கல்வி, வசிக்குமிடம், இணையதள முகவரி, சமூக வலைதள சுயகுறிப்பு, இ-மெயில், தொடர்பு எண் ஆகியவற்றைப் பூர்த்தி செய்தால் போதும். பின்னர் 6 இலக்க எண் உங்கள் செல்லிடப் பேசிக்கு அனுப்பப்பட்டு சரி பார்க்கப்பட்டவுடன், உங்கள் "பீப்பிள் கார்ட்ஸ்' தயாராகிவிடும்.
இந்தியாவில் புதிதாக தொழில் தொடங்குவோர், பலமுனை கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றவர்களுக்கு "பீப்பிள் கார்ட்ஸ்' சேவை கூடுதல் ஊக்கத்தை தரும் என்றாலும், இதில் இடம் பெறும் தகவல்கள் உண்மையானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருந்தால் பயனுள்ளதாக அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...