மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இணைய வழியில் திறனறிதல் தேர்வு!

வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்-2020 அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வு நிகழாண்டில் ஆன்-லைன் மூலம் நடைபெறுகிறது.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2020, 12:30 am

வி.குமாரமுருகன்

வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்-2020 அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வு நிகழாண்டில் ஆன்-லைன் மூலம் நடைபெறுகிறது. அதிலும், தமிழிலேயே அனைத்து தேர்வுகளையும் எழுதலாம் என்கிறார் வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன், தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான். அவர் நம்மிடம் கூறியது: 

""இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி.இ.ஆர்.டி (NCERT, GOVT.OF INDIA) ஆகியவை இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. 

அறிவியல் மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்ப்பதோடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் கரோனா பேரிடரால் பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால் வீட்டில் இருந்தே இத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும். 
இத்தேர்வு இந்தியா முழுவதும் 29-11-2020 (ஞாயிறு) மற்றும் 30-11-2020 (திங்கள்) ஆகிய இரு நாள்கள்   இணைய வழியில் நடைபெற உள்ளன. ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி, கணினி மூலம் தேர்வு எழுதலாம். 

நிகழாண்டில் இந்த  திறந்த புத்தகத் தேர்வினை தமிழ், இந்தி, மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய மாநில மொழிகளிலும் மாணவர்கள் தேர்வு எழுத இயலும். முக்கியமாக தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் தேசிய அளவிலான தேர்வு வரை அனைத்தையும் தமிழிலேயே எழுதலாம்.

தேர்வின் நோக்கங்கள்:

அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறையில் பள்ளி மாணவர்களின் பங்கேற்பை அதிகரித்தல். அறிவியல் துறையில் இந்திய விஞ்ஞானிகளின் பங்கு பற்றி அறிதல்.
மிகப்பெரிய அறிவியல் ஆய்வில் மாணவர்கள் பங்கேற்றல்.

முக்கிய தகவல்கள்:

தேர்வுக் கட்டணம்:  ரூ.100  விண்ணப்பிக்க கடைசித் தேதி:  30-09-2020 .
தேர்வு நேரம்:  90 நிமிடங்கள் (காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை எப்போது வேண்டுமென்றாலும் எழுதலாம். ஆனால்,  ஒரு மாணவர் ஒரு முறை மட்டுமே எழுத முடியும்)
6 -ஆம் வகுப்பு முதல் 11 -ஆம் வகுப்பு வரை  படிக்கும் அனைத்து மாணவர்களும் இத்தேர்வை எழுதலாம். 
6 -ஆம் வகுப்பு முதல் 8 -ஆம் வகுப்பு  வரை ஒரு பிரிவாகவும், 9 - ஆம் முதல் 11- ஆம் வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடைபெறும். 

தேர்விற்கான பாடத்திட்டம்: 

பள்ளி மாணவர்களின் அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து 50 சதவீத வினாக்களும், "அறிவியல் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு' என்ற புத்தகத்தில் இருந்து 20 சதவீதக் கேள்விகளும், "வியான்கடேஸ் பாபுஜி கெட்கர் வாழ்க்கை வரலாறு மற்றும் நேரத்தை அளவிடுவதில் அவரின் அறிவியல் சாதனைகள்' என்ற புத்தகத்தில் இருந்து 20 சதவீத கேள்விகளும், சிந்தித்து விடையளித்தல் என்ற தலைப்பில் 10 சதவீத கேள்விகளும் ஆக மொத்தம் 100 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.

எவ்வாறு பதிவு செய்வது? 

www.vvm.org.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்க விரும்புவர்கள் இணையதளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.பள்ளி மூலமாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பள்ளி மூலமாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பள்ளி அளவிலான சான்றிதழ் வழங்கப்படும். 

பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்:

பள்ளியில் ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் 10 மாணவர்கள் பங்கேற்றால் வகுப்பிற்கு 3 மாணவர்களுக்கு பள்ளி அளவிலான மின் சான்றிதழ்கள் வழங்கப்படும். 
மாவட்ட அளவில் (6 முதல் 11 - ஆம் வகுப்புவரை) ஒவ்வொரு வகுப்பிற்கும் 3 பேர் வீதம் 18 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். 
மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 120 பேர் இரண்டாம் கட்ட தேர்விற்கு அழைக்கப்படுவர். அத்தேர்வு செயல்முறை வடிவில் அமைந்து இருக்கும்.  
இதில் தேர்வு செய்யப்படும் 120 மாணவர்களுக்கும் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்படும். 120 மாணவர்களில் வகுப்பிற்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, ரொக்கப்பரிசாக முறையே ரூ.5000, ரூ.3000, ரூ,2000 வழங்கப்படும்.

தேசிய அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 

( 6 முதல் 11 - ஆம் வகுப்பு வரை) முதல் 2 இடங்களை பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான முகாமிற்கு அழைக்கப்படுவார்கள். 
தேசிய அளவில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும். தேசிய அளவிலான முகாமில் நடைபெறும் பல்வேறு வகையான அறிவியல் சார் நிகழ்வுகளில் அவர்கள் பங்கேற்பார்கள். அதில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் ( 6 முதல் 11-ஆம் வகுப்பு வரை ) 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.25000, ரூ.15000, ரூ.10000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். 
மண்டல அளவிலும் ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக செய்த மாணவர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என ரொக்கப்பரிசு வழங்கப்படும். அனைத்து மாணவர்களும் ஒவ்வொரு விஞ்ஞானி அல்லது ஆராய்ச்சியாளருடன் இணைக்கப்பட்டு அவர்கள்  வழிகாட்டப்படுவார்கள். 

மேலும் இந்த வருடம் பதிவு செய்யும் மாணவர்கள் அனைவரும் இந்திய அளவிலான மிகப்பெரிய அறிவியல் ஆய்வில் பங்கேற்கும் வாய்ப்பும் உள்ளது'' என்றார் கண்ணபிரான்.

தொடர்புக்கு:

Email:vvmtamilnadu@gmail.com 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.