மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பேஸ்புக்கில் டிக் டாக்!

இந்திய இளைஞர்கள் அதிக பயன்படுத்திய  டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டதால், பல்வேறு நிறுவனங்கள் அந்த இடத்தைப் பிடிக்க முந்திக் கொண்டுள்ளன.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2020, 12:30 am

அ. சர்ஃப்ராஸ்


இந்திய இளைஞர்கள் அதிக பயன்படுத்திய டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டதால், பல்வேறு நிறுவனங்கள் அந்த இடத்தைப் பிடிக்க முந்திக் கொண்டுள்ளன. இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக்கிற்கு தடை வந்ததால் சர்வதேச அளவில் மாற்று செயலிக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது.
டிக் டாக்கைப் போன்று பல்வேறு செயலிகள் பயன்பாட்டில் இருந்தாலும் அவற்றைப் பெரும்பாலானோர் பயன்படுத்த முன் வரவில்லை.
டிக்டாக் தடைக்கு பிறகு இந்தியாவில் பேஸ்புக் பயன்பாடு 25 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.
ஆகையால், இந்த வெற்றிடத்தைக் கைப்பற்ற பிரபல பேஸ்புக் நிறுவனம், யூடியூப் ஆகியவை போட்டிபோட்டுக் கொண்டு டிக்டாக்கைப் போன்று சிறு விடியோக்களைப் பதிவேற்றம் செய்யும் சேவைக்கான சோதனையில் ஈடுபட்டுள்ளன.
முதலில் பேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் "ரீல்' எனும் புதிய சேவையை கடந்த சில நாள்களுக்கு முன்பு முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. 15 நிமிட சிறு விடியோவை இன்ஸ்டாகிராம் கேமராவில் பதிவு செய்து, அதில் இசை, சிறப்பு சத்தங்கள் ஆகியவற்றை இணைக்கும் வசதி இதில் உள்ளது.
இதேபோல், பேஸ்புக் தனது முக்கிய பக்கத்திலேயே "சிறு விடியோ' சேவையை வழங்கி சோதனை செய்து வருகிறது.
டிக் டாக் செயலியில் உள்ள அனைத்து அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இதுவும் இந்திய பயன்பாட்டாளர்களிடம்தான் அதிகமாக சோதனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைவருக்கும் இந்த சேவை தொடங்கப்பட உள்ளது. இதில் பதிவேற்றம் செய்யப்படும் சிறு விடியோக்களுக்கு லைக் மற்றும் கமெண்ட்டுகளைப் பதிவு செய்ய முடியும்.
டிக் டாக் செயலியில் கட்டுப்பாடின்றி வரும் பாலியல் வன்புணர்வு, வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் விடியோக்களால் பல ஆண்டுகளாக அந்த செயலியைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
தற்போது பெரும்பாலானோர் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் தொடங்கப்படும் டிக் டாக்கைப் போன்ற புதிய சேவைகளுக்கு தொடக்கத்திலிருந்தே கட்டுப்பாடுகளை விதித்தால் பாதுகாப்பானதாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.