பயன்படுத்துங்கள்... அளவோடு!
செல்லிடபேசி பயன்பாடு என்பது இன்று அத்தியாவசியமாகிவிட்டது. அதனால் செல்லிட பேசியை எந்த அளவுக்கு உபயோகமாக பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமானது. தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


செல்லிடபேசி பயன்பாடு என்பது இன்று அத்தியாவசியமாகிவிட்டது. அதனால் செல்லிட பேசியை எந்த அளவுக்கு உபயோகமாக பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமானது. தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் இன்று செல்லிடபேசியும் கையுமாகவே பலர் இருக்கிறார்கள்.
செல்லிடபேசியைப் பயன்படுத்துவது ஒரு போதைப் பழக்கம் போல ஆகிவிட்டது.
இளம் வயதினர் செல்லிட பேசியைப் பயன்படுத்துவதை தடுக்க முடியாது. ஆனால் அதைப் பயன்படுத்துவது குறித்து தெளிவுடன் சிந்தித்தால், தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்த முடியும்.
செல்லிட பேசியைப் பயன்படுத்துவதைப் பற்றிய விழிப்புணர்வை பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கும், ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். ஆனால் நிறைய பெற்றோர்களும், ஆசிரியர்களுமே செல்லிடபேசிக்கு அடிமையாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.
செல்லிடபேசிகளின் பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதற்கான சில
வழிகள்:
1.செல்லிடபேசிகளில் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்பதைத் திட்டமிட்டு அதைப் பின்பற்றுங்கள்.
2.குறுஞ்செய்திகளுக்கோ அல்லது போன் அழைப்புக்கோ மற்றவர்கள் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது, நீங்களும் அவ்வாறு உடனடியாகப் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. அந்த உணர்ச்சிவசப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
3.வாகனம் ஓட்டும்போது செல்லிட பேசியைப் பயன்படுத்தக் கூடாது.
4.தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்க வேண்டும். தூங்குவதற்கு முன்னதாக ஒரு மணி நேரம் செல்லிடபேசியைப் பயன்படுத்தக் கூடாது.
5.நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே "சாட்' செய்ய வேண்டும் என்று
நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
6.தினசரி போன் பயன்பாட்டைக் கண்காணிக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களை உடனடியாக நிறுத்தவும் வேண்டும்.
7."அன்லிமிடெட்' பேக்குகளைத் தவிர்த்து செல்லிடபேசியை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறீர்களோ, அதற்கேற்ப ரீசார்ஜ் செய்யுங்கள். இது உங்களின் கூடுதல் செல்லிடபேசி பயன்பாட்டை நிச்சயமாகக் கட்டுப்படுத்தும்.
8.உங்கள் செல்லிடபேசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பிறருக்கு நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். ஏனெனில் உங்களைப் பார்த்தே உங்களுடைய நண்பர்களும் செல்லிடபேசி பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வாய்ப்புண்டு.
9.சாப்பிடும்போதும் குடும்பத்தினர் ஒன்றுகூடும் போதும் செல்லிட பேசியை ஒதுக்கி வையுங்கள்.
11.ஓடுவது, விளையாடுவது அல்லது நடப்பது போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபட நேரத்தை ஒதுக்குங்கள். அதன் மூலம் செல்லிட பேசி பயன்பாட்டைக் குறைக்க முடியும்.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், மனித வாழ்க்கையில் இதுபோன்ற நவீன சாதனங்களின் பயன்பாடு அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர, குறையாது. நவீனத்தின் ஒருபகுதியாக இருப்பது நல்லதுதான்
என்றாலும் முடிந்தவரை தனிப்பட்ட வாழ்க்கையை அது பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். செல்லிட பேசிகளின் மூலம் கிட்டும் நன்மைகளை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.
செல்லிடபேசியின் பிடியில் இருந்து தப்பித்து, ஓடியாடி விளையாடி, குடும்பத்தினருடன், நண்பர்களுடன் பேசி மகிழ்ச்சியாக இருங்கள்.
"அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சு' என்பார்கள். அது செல்லிடபேசியைப் பயன்படுத்துவதற்கும் பொருந்தும். அளவோடு பயன்படுத்தி பயன் காணுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...