பேரவையில் மகளிர்...

விஜயதரணி ( 47): வழக்குரைஞர். சட்டக் கல்லூரியில் படிக்கும்போதே காங்கிரஸில் இணைந்தவர். 2011-இல் விளவங்கோடு எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்ட இவர், இப்போது மீண்டும் தேர்வாகியுள்ளார். மகளிர் காங்கிரஸில் அகில இந்திய
பேரவையில் மகளிர்...

சென்ற வார தொடர்ச்சி...

விஜயதரணி ( 47): வழக்குரைஞர். சட்டக் கல்லூரியில் படிக்கும்போதே காங்கிரஸில் இணைந்தவர். 2011-இல் விளவங்கோடு எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்ட இவர், இப்போது மீண்டும் தேர்வாகியுள்ளார். மகளிர் காங்கிரஸில் அகில இந்திய பொதுச்செயலராக உள்ள இவர், சட்டப் பேரவையிலும், கட்சியிலும், தொலைகாட்சிகளிலும் பரபரப்பாக பேசப்படும் அரசியல்வாதி. இவரது கணவர் சிவக்குமார் கென்னடி அண்மையில் மறைந்தார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

உமா மகேஸ்வரி (40): பட்டதாரி, விளாத்திகுளம் ஒன்றியக் குழுத் தலைவராக 2011-இல் தேர்வு செய்யப்பட்டவர். இப்போது விளாத்திகுளம் எம்எல்ஏவாகியுள்ளார். இவரது கணவர் ரகுபதியும் அதிமுகவில் பொறுப்பில் உள்ளார் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

சித்ரா (36): மஞ்சக்குட்டை ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக இருந்தவர். அதிமுகவில் கட்சிப் பணி. ஏற்காடு (எஸ்.டி.) தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவரது கணவர் குணசேகரன், லாரி டிரைவர். 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

மனோன்மணி (52): பட்டதாரி. விவசாயி.  முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமியின் தங்கை.  அதிமுகவில் தொடக்க நாள் முதல் தீவிர கட்சிப் பணி. பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவராக இருந்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி தொகுதியில் எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது கணவர் சிவக்குமார், வட்டாரப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றிவருகிறார். 2 மகன்கள் உள்ளனர்.

பொன். சரஸ்வதி (55): பட்டதாரி. அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினர். 2011-இல் திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இப்போது திருச்செங்கோடு எம்எல்ஏவாகியுள்ளார். இவரது கணவர் பொன்னுசாமி, தொழிலதிபர்.

கஸ்தூரி வாசு (56): 1980 முதல் அதிமுகவில் கட்சிப் பணி. ரமணமுதலிபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாசாணியம்மன் கோயில் அறங்காவலர் குழுத்தலைவராகப் பணியாற்றியவர். வால்பாறை (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

மனோரஞ்சிதம் (41): 8ஆம் வகுப்பு படித்தவர். அதிமுகவில் பணியாற்றிவருகிறார். 2011-இல் ஊத்தங்கரை (தனி) தொகுதி எம்எல்ஏவாக இருந்த இவர், இப்போது மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது கணவர் நாகராஜ்.

சீதாபதி சொக்கலிங்கம் (66)): பட்டதாரி. அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். ஒலக்கூர் ஒன்றியக் குழுத் தலைவராக இருந்தவர். திமுகவை சேர்ந்தவர். இப்போது திண்டிவனம் (தனி) தொகுதி எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 3 மகன்கள் உள்ளனர்.

எம்.கீதா (44): பட்டதாரி. 2011-ஆம் ஆண்டு

உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இப்போது கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது கணவர் ஆர்.மணிவண்ணன், நெரூர் வடபாகம் ஊராட்சி மன்றத் தலைவராகப் பணியாற்றினார். ஒரு மகன் உள்ளார்.

பரமேஸ்வரி முருகன் (37): பட்டதாரி. அதிமுகவில் 1996 முதல் பணியாற்றிவருகிறார். இந்தத் தேர்தலில் மண்ணச்சநல்லூர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது கணவர் முருகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com