புதுவையில் இருந்து பெர்த் மாநகருக்கு...
தடகளப் போட்டிகளில் பெண்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனர். இந்திய அளவில் பிடி.உஷா, ஷைனி வில்சன், பாபி அஞ்சு ஜார்ஜ், டிண்டுலூகா போன்றவர்கள் முத்திரை பதித்துள்ளனர்.


தடகளப் போட்டிகளில் பெண்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனர். இந்திய அளவில் பிடி.உஷா, ஷைனி வில்சன், பாபி அஞ்சு ஜார்ஜ், டிண்டுலூகா போன்றவர்கள் முத்திரை பதித்துள்ளனர். மாஸ்டர்ஸ் தடகளப் போட்டிகள் எனப்படும் வயது வந்தோருக்கான தடகளப் போட்டிகளில் புதுச்சேரி வீராங்கனை கிறிஸ்டி ஸ்டரீனா சாதனை படைத்துள்ளார்.
சிங்கப்பூரில் கடந்த மே மாதம் நடைபெற்ற 19-ஆவது ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் தங்கம், வெண்கலம் வென்று சாதனை புரிந்துள்ளார்.
மத்திய சுங்கவரித்துறையின் புதுச்சேரி வட்டார அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிபவர் ஜி.கிறிஸ்டி ஸ்டரீனா.
கொல்கத்தாவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அகில இந்திய வருவாய்த்துறை விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார். தமிழக அணிக்காக நேரடியாக பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட ஸ்டரீனா மைசூரில் நடந்த தேசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதல், மும்முறை
தாண்டுதல், 4 x100மீ தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார். இந்நிலையில் இந்திய அணி சார்பில் சிங்கப்பூரில் நடந்த 19 ஆவதுஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் பங்கேற்ற ஸ்டரீனா மும்முறை தாண்டுதலில் தங்கப் பதக்கமும், நீளம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கமும் வென்று சாதனை புரிந்துள்ளார்.
உலக மாஸ்டர்ஸ் போட்டிக்கு நேரடி தகுதி: இச்சாதனை எதிரொலியாக வரும் அக்டோபர் 26-ஆம் தேதி முதல் நவம்பர் 6-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா, பெர்த்தில் நடைபெறவுள்ள உலக மாஸ்டர்ஸ் தடகளப் போட்டிகளில் பங்கேற்க ஸ்டரீனா நேரடி தகுதி பெற்றுள்ளார்.
இதுகுறித்து ஸ்டரீனா கூறியதாவது:
""சென்னை தான் எனது சொந்த ஊர். 14 வயதில் இருந்து தடகளத்தில் ஆர்வம் ஏற்பட்டது. எத்திராஜ் கல்லூரியில் படித்தபோது, 100, 200, நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டத்தில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளேன். தேசிய அளவில் நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதலில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றேன்.
எனது கணவரும் தடகள வீரராக விளங்கியதால் அவரே எனது பயிற்சியாளராகவும் விளங்கினார். விளையாட்டாலேயே எனக்கு சுங்கத் துறையில் வேலைவாய்ப்பும் கிடைத்தது. புதுச்சேரியில் வேலை கிடைத்ததால் அங்கேயே வயது வந்தோருக்கான மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியிலும் பங்கேற்றேன். கடந்த 2006-ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் 3 தங்கம் வென்றேன். பின்னர் 10 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
மீண்டும் தீவிர பயிற்சி மேற்கொண்டு கடந்த மே மாதம் சிங்கப்பூரில் நடந்த ஆசிய மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்றேன். இதில் ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றேன். ஆசிய போட்டியில் சீனா, மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், இலங்கை உள்பட 19 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறவுள்ள உலக மாஸ்டர் தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளேன்'' என்றார் ஸ்டரீனா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...