இன்னொரு இந்திய மகள்...
"டில்லி நிர்பயா பாலியல் படுகொலைச் சம்பவத்திற்குப் பிறகு கேரளாவில் இன்னொரு சோகம்! ஆம்.. கொச்சி நகரை


"டில்லி நிர்பயா பாலியல் படுகொலைச் சம்பவத்திற்குப் பிறகு கேரளாவில் இன்னொரு சோகம்! ஆம்.. கொச்சி நகரை அடுத்திருக்கும் பெரும்பாவூரில் 29 வயதாகும் ஜிஷா பாலியல் வன்கொடுமைக்குப் பலியாகியிருப்பது கேரளத்தைப் பதறச் செய்திருக்கிறது.
ஆம்; உடல் முழுவதும் 30 கத்திக் குத்துகள்... மார்பு சிதைந்த நிலை .... குடல் வெளியே... கொடூரம்...
ஜிஷாவுக்காக நீதி கேட்டு போராட்டங்கள் வெடித்துள்ளன. காவல்துறை தனது கடமையைச் செய்து வருகிறது. அமித்ஷா உட்பட, எல்லா கட்சிகளின் தலைவர்களும் ஜிஷாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். ஜிஷாவின் குடும்பத்திற்கு பத்து லட்சம் நிதி உதவி.. ஜிஷாவின் தங்கைக்கு அரசு வேலை என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
நடிகர் ஜெயராமும், நடிகரும் ராஜ்ய சபா எம்பியுமான சுரேஷ் கோபியும் பெரும்பாவூருக்கு துக்கம் கேட்க வந்து அழுதே விட்டார்கள். கொலையாளியை பொது இடத்தில் தூக்கிலிடவேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது.
சட்டம் படித்த ஜிஷா, சட்டம் போடப்பட்ட போட்டோவினுள் இன்னொரு இந்திய மகளாக அடங்கிவிட்டார்... ஜிஷா பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொலை செய்யப்பட செய்தி வெளிவந்ததும், திருச்சூர் பக்கத்தில் முரிங்கூர் கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் ஒரு குடிசையில் வாழும் அம்மணி ஒருவர் வயதுக்கு வந்த தன் மகள் உறங்கும் போது பாலியல் வன்முறைக்கு ஆளாகாமல் இருக்க, இரவு முழுதும் தூங்காமல் காவல் இருக்கும் செய்தியும் கேரள நாளிதழில் வெளியானது.
ஜிஷாவுக்கு நடந்தது மாதிரி எந்த ஏழைப்பெண்ணுக்கும் அசம்பாவிதம் நடந்து விடக் கூடாது என்று முடிவு செய்த மலையாள நடிகை மஞ்சு வாரியர், அப்பெண்ணின் படிப்பு செலவையும் ஏற்று, புதிய வீடு ஏற்பாடு செய்வதாகவும் உறுதி தந்ததோடு, தற்காலிகமாக வசிக்க பாதுகாப்பான வீட்டை வாடகைக்கும் எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
மூளைச் சாவு சம்பவித்தவரின், முக்கிய உடல் பாகங்களை தானம் செய்வது போல, உயிர்ச் சாவு சம்பவித்த பின்பும், உதவி தேவைப்படுபவர்களுக்கான நிதி உதவியை ஜிஷா பெற்றுத் தந்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...