கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தலைசிறந்த இந்திய பெண் தொழிலதிபர்கள்

News image
Updated On :9 நவம்பர் 2016, 2:56 pm

பனிமலர்

சந்தா கோச்சார்

ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. ரூ. 9.4 லட்சம் கோடி மதிப்பிலான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி நாட்டின் தனியார் துறை வங்கிகளில் மிகப் பெரிது. உலகின் 50 சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக அமெரிக்க வணிக இதழான "ஃபார்ச்சூன்' இவரைத் தேர்வு செய்தது.

அகிலா ஸ்ரீநிவாசன்

நிர்வாக இயக்குநர், ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட். 2000-ஆம் ஆண்டு முதல் இப்பதவியில் இருந்து வருகிறார். ஸ்ரீராம் குழுமத்தின் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். விருதுகள் பல பெற்றவர். வாழும் கலை அமைப்பின் தமிழ்நாடு தலைவர். ஆசியாவின் தலைசிறந்த 50 பெண்களில் ஒருவராக அமெரிக்காவின் "ஃபோர்ப்ஸ்' இதழ் இவரைப் பாராட்டியது.

மல்லிகா ஸ்ரீநிவாசன்

டாஃபே நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் நிர்வாகியுமான மல்லிகா ஸ்ரீநிவாசன் உலகின் திறமைசாலியான பெண்களில் ஒருவர் என்று பிரபல தொழில் துறை இதழான "ஃபார்ச்சூன்' புகழ்ந்துள்ளது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டாஃபே, உலகின் மூன்றாவது பெரிய டிராக்டர் நிறுவனமாகும். இந்திய தொழில் துறைக்கு மல்லிகா ஸ்ரீநிவாசனின் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் 2014-இல்
பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

பிரீத்தா ரெட்டி

நிர்வாக இயக்குநர், அப்போலோ ஹாஸ்பிடல்ஸ். சுகாதாரத் துறையில் மக்கள் நலன் பேணும் அமைப்பில் முன்னோடி அமைப்பு இது.

ஷாநாஸ் உசேன்

ஷாநாஸ் ஹெர்பல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி. மூலிகை ஒப்பனைப் பொருள் மற்றும் சருமப் பாதுகாப்பு அழகு சாதனங்கள் தயாரிப்பில் உலகப் புகழ் பெற்றவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். "சக்சஸ்' இதழ் தலைசிறந்த உலக மகளிர் தொழிலதிபர் விருது (1996) வழங்கி கெüரவித்தது. 138 நாடுகளில் 400 கிளைகள் கொண்ட நிறுவனம் இவருடையது.

ஷரன் அப்பாராவ்

அப்பாராவ் கேலரியின் உரிமையாளர். இந்திய ஓவியத்தில், உலக அளவில் பெயர் பெற்ற நிறுவனம். நவீன உலகில் சாதனைகள் பல புரிந்தவர் என இந்திய தொழிலக மற்றும் வர்த்தக சபைகளின் சம்மேளனம் (ஃபிக்கி) இவரைப் பாராட்டி கெüரவித்துள்ளது.

பிரியா பால்

தலைவர் ஏபிஜே சுரேந்திரா பார்க் ஹோட்டல்ஸ் குழுமத்தின் தலைவர். இந்தக் குழுமத்துக்கு சொந்தமாக நாடு முழுவதும் பல நவீன பார்க் நட்சத்திர ஹோட்டல் சங்கிலித் தொடர் உள்ளது.

ஏக்தா கபூர்

பாலாஜி டெலி பிலிம்ஸின் கிரியேட்டிவ் இயக்குநர். பிரபல ஹிந்தி நடிகர் ஜீதேந்திரா - ஷோபனா கபூர் தம்பதியின் மகள். தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களின் தயாரிப்பாளர்.

ஜோதி நாயக்

மும்பையில் உள்ள ஸ்ரீ இந்தியப் பெண்கள் கூட்டுறவுத் தொழில் அமைப்பின் தலைவர். பிரபல லிஜ்ஜத் பப்படம் (அப்பளம்) தயாரிக்கும் அமைப்பு இது. 2001-02 ஆம் ஆண்டின் தலைசிறந்த தொழிலதிபராக பிரபல ஆங்கில நாளேடான "எக்னாமிக்ஸ் டைம்ஸ்' இவரை கெüரவித்தது. 1959-இல் ரூ.80 முதலீட்டுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் இன்றைய ஆண்டு வருவாய் ரூ. 750 கோடிக்கும் மேல். தற்போது 43,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது இந்த அமைப்பு.

சிமோன் டாடா

தலைவர், ட்ரென்ட் லிமிடெட். பிரெஞ்சுக் காரரான இவர் சுவிட்சர்லாந்தில் படித்தவர். 1955-இல் இந்தியா வந்த இவர், லக்மே இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக 1961-இல் பொறுப்பேற்றார். அதன் தலைவராக 1982-இல் உயர்ந்தார். 1989-இல் டாடா சன்ஸ் நிர்வாக குழுமத்தில் உறுப்பினரானார்.

ஷிகா சர்மா

ஆக்ஸிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. பிரிட்டனின் "ஃபைனான்ஷியல் டைம்ஸ்' நாளேட்டின் சிறந்த இந்திய வங்கிக்கான விருதை 2014-ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர். இவரது தலைமையில் வங்கியின் சிறப்பான செயல்பாடு குறித்து உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல் ஆய்வு மேற்கொண்டது.


அடுத்த போட்டியில் வெற்றி பெறுவதில் மும்முரம் காட்ட வேண்டும். உலக தர வரிசையில் முதல் நாற்பதுக்குள் நான் வந்து விட வேண்டும். அதுதான் உடனடி லட்சியம். அப்போதுதான், விளையாட நிதி உதவிகள் கிடைக்கும். சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது எதிராளியிடமிருந்து அழுத்தம், நெருக்கடி ஏற்படும். அப்படி விளையாடினால்தான் பல லாகவங்களைக் கற்க முடியும். எதிராளியின் போக்கை, அடுத்த நகர்வைக் கணிக்க முடியும். அதற்கேற்ற மாதிரி சுதாரித்து நம்மைத் தயார் படுத்திக் கொள்ளவும் முடியும்... விளையாடி விளையாடிதான் இந்த அனுபவத்தைப் பெற முடியும்'' என்கிறார் ருத்விகா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.