நடனமாடிக் கொண்டே ஓவியம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கலைக் கல்லூரியில் ஓவியத் துறையில் பட்டம் பெற்றவர் லீஜா லட்சுமணன்.
நடனமாடிக் கொண்டே ஓவியம்!
Updated on
1 min read

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கலைக் கல்லூரியில் ஓவியத் துறையில் பட்டம் பெற்றவர் லீஜா லட்சுமணன். இவர் மேடையில் பரதநாட்டியம் ஆடி முடிக்கும்போது கேன்வாஸில் ஓர் அழகான வண்ண ஓவியம் வரைந்து முடிக்கப்பட்டிருக்கும். ஆம்! இவர் நாட்டியமாடிக் கொண்டே மனங்கவரும் அழகான வண்ண ஓவியத்தை கால்களால் அல்ல கைகளால் வரைந்துவிடுவார்.
 விருதுகள் பலவற்றைப் பெற்றிருக்கும் இவர் கற்றது ஓவியமும் நாட்டியமும். இந்த இரண்டு கலைகளையும் ஒரே சமயத்தில் நிகழ்த்தி நம்மை ஆச்சரியப்படுத்துவார். தெய்வீக ஓவியங்களை வரைவதுடன் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஓவியங்களையும் வரைகிறார். எல்லாம் நடனத்துடன் தான்!
 இவர் கன்னூர் பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் முதுநிலைப் படிப்பைப் பூர்த்தி செய்துள்ளார். பரதம் தொடர்பான படிப்பை முடிந்த பின்னர் ஓவியக் கலையையும் நாட்டியக் கலையையும் இணைத்து ஒரு புதிய கலையை பொது அரங்கில் நிகழ்த்த ஆரம்பித்தார். நாட்டியத்தில் பதங்களை ஆடி முடிப்பதுடன் சேர்த்து ஒரு வண்ண ஓவியமும் மேடையில் தோன்றியிருக்கும். சுற்றுச்சூழல் கல்வி யாத்திரையின் நிறைவு நாளன்று இவர் நடத்திய கலை நிகழ்ச்சியும் கடற்கரையில் நிகழ்த்திய கலை நிகழ்ச்சியும் கண்டவர்கள் மறக்க முடியாத நிகழ்ச்சிகளாகும்.
 - தங்க. சங்கர பாண்டியன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com