ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குண்டுக்கு அடித்த யோகம்

ஷோபா டே பிரபல பத்திரிகையாளர், ஸ்டார் டஸ்ட் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர். எழுத்தாளர்.

News image
Updated On :12 ஏப்ரல் 2018, 9:02 am

ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்

ஷோபா டே பிரபல பத்திரிகையாளர், ஸ்டார் டஸ்ட் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர். எழுத்தாளர். நிறைய புத்தகங்களும் எழுதியுள்ளார். ட்விட்டரில் தான் பார்த்தையும் கேட்டதையும் தனது கருத்தையும் சேர்த்து "வீக்' இதழில் வாரம்தோறும் பகிர்ந்து கொள்வார்.

அப்படி ஒரு புகைப்படத்தை HEAVY DUTY BANDOBAST IN MUMBAI TODAY எனக் கூறி ரொம்ப குண்டான போலீஸ்காரர் போனில் பேசிக் கொண்டிருப்பதை படம் எடுத்து டூவிட்டரில் போட்டிருந்தார். அந்த போலீஸ்காரர் செம குண்டு. அதனால் HEAVY DUTY என நாசூக்காக கிண்டலும் செய்திருந்தார். இந்த புகைப்படம் வைரலானது.
உண்மையில் இந்த போலீஸ்காரர் ஒரு மத்திய பிரதேச இன்ஸ்பெக்டர். பெயர் தவுலத்ராம் ஜெகாவத். ஆனால் அவர் யார் என ஷோபா டேக்கு தெரியாது. அது பற்றி அவர் தெரிந்து கொள்ளவும் இல்லை. இந்த வைரல் புகைப்படத்தை மும்பையைச் சேர்ந்த, கூடுதல் சதைகளை அகற்றி உதவும் டாக்டர் முபாசல் லக்தா வாலா பார்த்துள்ளார்.

டாக்டர் தவுலத் ராம் ஜெகாவத்துக்கு உதவ முன் வந்தார். அதுவும் தன் ஆஸ்பத்திரியில், முழு சிகிச்சையும் இலவசம் என அறிவித்தார். இதனை ஏற்ற தவுலத் ராம் ஜெகாவத் மருத்துவ மனையில் சேர்ந்தார். 

ஒரு வருடத்தில் தவுலத் ராம் 65 கிலோ எடையை குறைத்துவிட்டார். ஷோபா டேவை, போனில் பிடித்து பேசினார். நன்றி கூறினார். அத்துடன் ஷோபா டேயை நேரில் வந்து சந்தித்து நன்றி கூற விரும்புவதாகவும் கூறினார். குடும்பத்துடன் வாருங்கள் என்றார் ஷோபா டே. அதற்கு தவுலத் ராம் ""இன்னமும் 30 கிலோவை குறைக்க எண்ணியுள்ளேன். அதனையும் குறைத்துவிட்டு, வந்து நன்றி கூறுகிறேன்'' எனக் கூற, ஷோபா டே "வாருங்கள்' எனக் கூறிய பின், அவருக்கு ரொம்ப மகிழ்ச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.