தேன், பூண்டு,வெங்காயம், கல்உப்பு இவை நான்கும்கரோனாவை விரட்டும் வல்லமை கொண்டவை. எப்படிபயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம்:
தேன்
நறுக்கிய இஞ்சி துண்டுகள் ஒரு தேக்கரண்டி எடுத்துஅதில் ஒரு தேக்கரண்டி தேனைவிட்டு மென்று தின்றால்தொண்டைக்கட்டுசரியாகும்.
தேன் ரத்தத்தில்உள்ள ஹீமோகுளோபின்அளவைஅதிகரிக்கும்.
கால் தேக்கரண்டிமிளகுப் பொடியில் சிறிது தேன்விட்டு குழைத்துநாக்கில்தடவிக் கொண்டால்இருமல் நிற்கும்.
பாலில்தேன் கலந்து குடித்து வந்தால்உடலில்நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்.பழ சாலட்,பால், இட்லிபோன்றவற்றுடன் தேன் கலந்து உண்டு வந்தால் கரோனாகிட்ட நெருங்காது.
பூண்டு
இரைப்பை, நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு பூண்டு நல்ல மருந்து.
சளி பிடித்துக் கஷ்டப்படுபவர்களுக்கு பூண்டை உரித்து, நசுக்கி, தக்காளி, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்த சூப்பாகக் குடிக்கச் சொல்லலாம்.
கரோனா, நிமோனியா ஜுரம் வந்தவர்கள் பூண்டை சாப்பிட்டால் விரைவில் குணமடைவார்கள். பாலில் பூண்டைப் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம் போகும்.
வெங்காயம்
வெங்காயம் உடல் தளர்ச்சியினால் ஏற்படும் உபாதைகளைப் போக்குகிறது.
நோயாளி இருக்கும் அறையில் ஒரு சில வெங்காயத்தை இரண்டாக நறுக்கி வைத்தால் அது அறையில் உள்ள கிருமிகளை தன்னுள் இழுத்துக் கொள்ளும். நோயாளி விரைவில் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கை உலகின் பல நாடுகளிலும் இருக்கிறது. காரணம் வெங்காயத்துக்கு நோய் கிருமிகளை அழிக்கும் சக்தியுள்ளது.
வேகவைத்த வெங்காயத்தின் சாற்றை சாப்பிட்டால் ஜலதோஷம், இருமல், தொண்டைக்கட்டு முதலியன போய்விடும்.
ஜலதோஷத்திற்கு வெங்காயத்தை நறுக்கி முகர்ந்தால் சரியாகிவிடும்.
கல்உப்பு:
ஒருவாளித் தண்ணீரில் கால் கிலோ அளவுக்கு கல் உப்பைப் போட்டுக் கரைத்து அந்தத் தண்ணீரில் கை, கால் கழுவினால் கிருமி அழிந்துவிடும்.
கல் உப்பு போட்ட தண்ணீரால் வீட்டை துடைத்தாலும், வாசல் தெளிக்கும் போது அந்த நீரை கொண்டு தெளித்தாலும் கரோனா கிருமி கிட்ட அண்டாது.
கொதித்து ஆறிய வெந்நீரில் கல் உப்பையும், மஞ்சள் தூள் சேர்த்து வாய் கொப்பளித்தால் தொண்டையில் எந்த கிருமியும் பாதிக்காது.
கல்உப்பு, மஞ்சள் தூள், வேப்பிலை போட்ட வெந்நீரை கொண்டு ஆவி பிடித்தால் மூக்கு நாசியில் ஏற்படும் தொற்று, தலையில் ஏற்படும் சைனஸ் பிரச்னை ஆகியவற்றை நீக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
வீடியோக்கள்

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை


