45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிகரங்களை நோக்கி...

உலகில்  உள்ள மிக  உயரமான ஏழு சிகரங்களில்  இதுவரை  நான்கு  சிகரங்கள்  மீது ஏறி  சாதனை  புரிந்துள்ள  நந்திதா  நாகனகவுடர்  (31)  கர்நாடகாவின்  "முதல் சிவிலியன்  உமன்'  என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

News image
Updated On :30 செப்டம்பர் 2020, 12:30 am

பூா்ணிமா


உலகில் உள்ள மிக உயரமான ஏழு சிகரங்களில் இதுவரை நான்கு சிகரங்கள் மீது ஏறி சாதனை புரிந்துள்ள நந்திதா நாகனகவுடர் (31) கர்நாடகாவின் "முதல் சிவிலியன் உமன்' என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். மீதமுள்ள மூன்று சிகரங்கள் மீதும் விரைவில் ஏறி தன்னுடைய கனவை பூர்த்திச் செய்யப் போவதாக உறுதியுடன் கூறுகிறார்.
ஹூப்ளியில் சிறு நகரமொன்றில் பிறந்த நந்திதா, சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். இருந்தாலும் பல இன்னல்களையும், தடைகளையும் கடந்து படித்து கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து பன்னாட்டு நிறுவனமொன்றில் பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. சிட்னியில் இருந்தபோது வார இறுதி நாட்களில் பொழுது போக்காக நண்பர்களுடன் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். நாளடைவில் மலை ஏறுவதில் ஆர்வம் அதிகரித்தது.
இந்தியா திரும்பியவுடன் உலகிலுள்ள உயரமான ஏழு சிகரங்கள் மீதும் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்று விரும்பினார். தன்னுடைய எண்ணத்தை வீட்டில் தெரிவித்தபோது, அது ஆபத்தான முயற்சி வேண்டாம் எனக் கூறி தடுத்தனர். இதுவரை விளையாட்டாக மலை ஏறி பழக்கப்பட்டவர் முறைப்படி மலையேறும் பயிற்சிப் பெற்றால் மட்டுமேதான் நினைத்ததை சாதிக்க முடியுமென்பதில் உறுதியுடன் இருந்த நந்திதா, தன் குடும்பத்தினரை முதலில் சமாதானப்படுத்தி அனுமதி பெற்றார். 2014 -ஆம் ஆண்டு ராணுவ அதிகாரி
யொருவர் நடத்தி வந்த "அடல் பிகாரி வாஜ்பாய் இன்ஸ்டிடியூட் ஆஃப் மவுன்ட்டனரிங் அண்ட் எலைட் ஸ்போர்ட்ஸ்' என்ற அமைப்பில் சேர்ந்து பயிற்சிப் பெறத் தொடங்கினார்.
விடியற்காலை 4.30 மணிக்கெல்லாம் பயிற்சி துவங்கும், முதலில் உடல் தகுதிக்கான தேகப்பயிற்சி, சுவர் மீது கயிறு உதவியுடன் ஏறி
பழுகுதல், சைக்கிள் பயிற்சி, உணவு விஷயத்தில் மிகுந்த கட்டுப்பாடு, மசாலாப் பொருட்கள் கூடாது போன்ற கடுமையான விதிமுறைகளை கடைப்பிடித்து பயிற்சிப் பெற்ற
நந்நிதாவின் கனவு நனவாகும் நாளும் வந்தது. முதலில் 8848 மீட்டர் உயரமுள்ள இமயமலை மீது ஏறும் வாய்ப்பைப் பெற்றார். இனி தன் அனுபவத்தை நந்திதா கூறுவதைக் கேட்போம்:
""இமயமலை உச்சியை சென்றடையும் பயணம் 55 நாட்களாகும். முதலில் முறைப்படி உடல் தகுதி மருத்துவ பரிசோதனைகள் முடிந்தவுடன், பயணத்தின்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு நானே பொறுப்பேற்பதாக கையெழுத்திட்டுக் கொடுத்தேன். பின்னர் நேபாளத்தில் உள்ள நாம்கே அடிவார முகாமிலிருந்து தேவையான உணவுப் பொருட்களுடன் பயணத்தைத் துவங்கினோம். எட்டு நாட்களுக்குப் பிறகு இமயமலை அடிவார முகாமிற்குப் போய்ச் சேருவதற்குள் கொண்டு சென்ற உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்டன. பருவ நிலையும் 20 டிகிரி செல்ஷியஸôக இருந்தது. கூடாரம் அமைத்து துணையாக வரும் ஷெர்பா உதவியுடன் உணவுகளை தயாரித்தோம்.
இமயமலை மீது ஏற ஏற வெப்பநிலை குறையத் தொடங்கியபோது நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர முடிந்தது. ஏறும்போது பிடி நழுவி கீழே சரிந்தபோது உடன் வந்த குழுவினரால் காப்பாற்றப் பட்டேன். என் அம்மாவின் பிரார்த்தனையும், என்னுடைய உறுதியுமே துணிவுடன் மலையேற உதவின, இறுதியில் இமயமலை மீதுள்ள நான்காவது முகாம் சவுத்கோல் மீது ஏறி நம்முடைய தேசியக் கொடியை ஊன்றி பறக்க விட்டவுடன்தான் என்னுடைய முதல் மலையேறும் பயணம் முடிவடைந்தது.
பின்னர் கீழிறங்கி வந்து ஊர்போய் சேர்ந்து வீட்டிற்குள் நுழைந்த என்னைப் பார்த்த பிறகே அம்மா நிம்மதியடைந்தார். இத்துடன் என் மலையேறும் ஆர்வத்தை விட்டுவிட நான் விரும்பவில்லை.
அடுத்து 2016- ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள "கார்ஸ் டென்ஸ்' சிகரம் மீது ஏற முடிவு செய்தேன். இது இமய மலையை விட உயரம் (4884மீட்டர்) குறைவு என்றாலும், இதன் மீது ஏறுபவர்களுக்கு இது ஒரு சவாலான மலையாகும். பாறைகள் கூர்மையாக கண்ணாடி போல் இருக்கும். குரங்கு பாலம் என்ற இடத்தை கடக்கும்போது ஒரே ஒரு கயிறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறி விழுந்தால் உடலைத் தேடுவது கடினம்.
சிரமப்பட்டு ஒரு வழியாக குழுவினருடன் மேலே போய் சேர்ந்தோம். இறங்கும்போது ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கவே பாறைகள் வழுக்கின.
ஆறு நாட்கள் மேலேயே தங்க வேண்டியதாயிற்று. பனிக்கட்டிகளை குடிநீராகவும், உருளைக்கிழங்குகளை உணவாகவும் சாப்பிட்டு நாட்களை கழித்தோம். இனி கீழே இறங்குவது சுலபமல்ல அவ்வளவுதான் என்று நினைத்தோம். நல்ல வேளையாக தகவல் அறிந்து எங்களை காப்பாற்ற வந்த ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக கீழே வந்து சேர்ந்தோம். இது மறக்கமுடியாத அனுபவமாகும்.
அடுத்து 2017-ஆம் ஆண்டு தான்சானியாவில் உள்ள 5895 மீட்டர் உயரமுள்ள "கிளிமஞ்சாரோ' சிகரம் மீது ஏறிமுடித்தேன்.
தொடர்ந்து 2018- ஆம் ஆண்டு ரஷ்யாவில் 5652 மீட்டர் உயரமுள்ள "எல்பரஸ்' சிகரம் மீது ஏறி, உலகில் உள்ள ஏழு உயரமான சிகரங்களில் நான்கை முடித்தேன். ஒவ்வொரு சிகரமும் ஏறுவதற்கு வித்தியாசமானவை என்பதோடு மலையேறுபவர்களுக்கு புதிய அனுபவத்தையும் அளிக்கிறது. இது ஒரு மிகழ்ச்சியை தரும் சவாலாகும் என்று கூறும் நந்திதா, ஆறுமாதம் வேலை ஆறுமாதம் மலையேறுவது என்பதை கொள்கையாக வைத்துள்ளார். அடுத்து வட அமெரிக்காவில் உள்ள மவுண்ட் டெனாலி மீது ஏற திட்டமிட்டுள்ளார். அவரது திட்டப்படி ஏறிமுடித்தால் "மவுண்ட் டெனாலி' மீது ஏறிய முதல் கர்நாடக பெண்மணி என்ற சிறப்பைப் பெற வாய்ப்புள்ளது.
மலை ஏறுவதன் மூலம் பெண்களிடையே விழிப்புணர்வையும், தன்னம்பிக்கையும் ஏற்
படுத்தவே இந்த பயணங்களை மேற்கொண்டிருப்பதாக நந்திதா கூறினாலும், அடுத்து மூன்று சிகரங்கள் மீது ஏறி தன்னுடைய கனவை பூர்த்தி செய்ய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் அரசாங்கம் அல்லது தனியார் நிறுவனங்கள் உதவி கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார்.
இதுவரை தன்னுடைய வருமானத்தைக் கொண்டே பயிற்சிப் பெற்று நான்கு மலைகள் மீது ஏறி முடித்துள்ளார். ஒவ்வொரு நாட்டிலும் மலையேறுவதற்கு முன் அனுமதி பெறவும், பயணச் செலவுக்கும் தன் கையிருப்பு முழுவதையும் கரைத்து விட்டார். "சிவிலியன் உமன்' என்ற முறையில் இவரது துணிச்சலான பயணத்திற்கு ஸ்பான்சர் செய்ய தயங்குவதாகவும் கூறுகிறார்.
இவரது தனிப்பட்ட சாதனையை அறிந்த கர்நாடக அரசு, 2019 -ஆம் ஆண்டு "ராஜ் யோத்சவா விருது' அளித்து கௌரவித்துள்ளது. அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தபோது, மலை ஏறுவதற்காக செல்லும் நாடுகளுக்கும், நம்முடைய நாட்டிற்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் இவரது பயணத்தை பாராட்டி சான்றிதழ் வழங்கியதுடன், மேற்கொண்டு பயணச்செலவுக்கு உதவுவதாகவும் கூறினாராம். மேலும் இந்த ஆண்டு இறுதியில் ஜாகர்தாவில் நடைபெறவுள்ள ஆசியான் மாநாட்டில், 12 நாடுகளின் கொடி பரிமாற்ற நிகழ்ச்சியில் இந்திய பிரதிநிதியாக பங்கேற்கவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது பொது முடக்கம் காரணமாக அடுத்து மலையேறும் பயணத்தை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.