காளான் பஜ்ஜி 

காளான் பஜ்ஜி 

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி,  கொதிக்க வைத்து இறக்கவும். பின்னர் அந்த நீரில் காளானை சேர்த்து  2 நிமிடம் விட்டு பிறகு  எடுத்து அலசி எடுத்து, தண்ணீர் வடிய விடவும். காளானில் உள்ள நீர் 


தேவையானவை:

பட்டன் காளான் - 200 கிராம்
(துண்டுகளாக்கப்பட்டது)
மைதா - 100 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி,  கொதிக்க வைத்து இறக்கவும். பின்னர் அந்த நீரில் காளானை சேர்த்து  2 நிமிடம் விட்டு பிறகு  எடுத்து அலசி எடுத்து, தண்ணீர் வடிய விடவும். காளானில் உள்ள நீர் முற்றிலும் வற்றிய பின், ஒரு கிண்ணத்தில் மைதா, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காளானை,  கலந்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து காளானையும் பொரித்து எடுத்தால், காளான் பஜ்ஜி ரெடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com