பொட்டேட்டோ ஸ்மைலி 

உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மசித்த கிழங்கு, பிரெட் க்ரம்ஸ், கார்ன்ஃப்ளார், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, சீஸ் சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணி நேரம்
பொட்டேட்டோ ஸ்மைலி 


தேவையானவை :

உருளைக்கிழங்கு - கால் கிலோ
பிரெட் க்ரம்ஸ் - 3 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 3 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செடார் சீஸ் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -  கால் தேக்கரண்டி
ஸ்மைலி செய்ய...
ஸ்பூன் - 1
ஸ்ட்ரா - 1
ரவுண்ட் கட்டர்- 1

செய்முறை :

உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக் கிழங்கு, பிரெட் க்ரம்ஸ், கார்ன்ஃப்ளார், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, சீஸ் சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பிசைந்த மாவில் பெரிய உருண்டையாக எடுத்து அதை நன்றாக உருட்டி கொள்ளவும். பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது எண்ணெய் தேய்த்து நடுவில் மாவை வைத்து மூடி சப்பாத்தி கட்டையால் சப்பாத்தி போல தடியாக தேய்க்க வேண்டும். பின்னர் கட்டர் கொண்டு வட்டமாக வெட்டி ஸ்ட்ராவினால் கண்கள் போல் இரண்டு ஓட்டை போட வேண்டும். அடுத்து வாய்க்கு ஸ்பூனால் வரைய வேண்டும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்து வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து ஸ்மைலிகளை போட்டு பொரித்தெடுத்து டொமேட்டோ கெட்சப் உடன் பரிமாறவும். சூப்பரான பொட்டேடோ ஸ்மைலி ரெடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com