சிறுகீரை கட்லெட் 

கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். அதேபோன்று வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிறுகீரை கட்லெட் 


தேவையானவை :

சிறுகீரை - அரை கட்டு
வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - அரை அங்குலம் அளவு
உருளைக்கிழங்கு - 25 கிராம்
பிரெட் - 25 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - முக்கால் தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - முக்கால் தேக்கரண்டி
ரஸ்க் பவுடர் - 50 கிராம்
மைதா - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். அதேபோன்று வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். பிரெட்டை தண்ணீரில் நனைத்து தண்ணீரை பிழிந்து விட்டு மசித்து வைக்கவும். கீரையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து ஒரு நிமிடம் வேக வைக்கவும். பிறகு, இத்துடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, பிரெட், உப்பு, மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து கட்லெட்டுகளாக செய்து வைக்கவும். மைதாவை 50 மில்லி தண்ணீர் சேர்த்து கட்லெட் மேல் தெளிக்கவும். அதன் மேல் ரஸ்க் பவுடரை தூவவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய்யைத் தடவி, கட்லெட்டை  இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். சூப்பரான சிறுகீரை கட்லெட் ரெடி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com