சின்னத்திரை  மின்னல்கள்!

"சந்திரலேகா', "ரோஜா' தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுனிதா. இவர், தனது சின்னத்திரை அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டவை,""தெய்வமகள்' தொடர்தான் எனது முதல் தொடர்.
சின்னத்திரை  மின்னல்கள்!


சீரியலில்தான் சைக்கோ வில்லி!

"சந்திரலேகா', "ரோஜா' தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுனிதா. இவர், தனது சின்னத்திரை அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டவை, ""தெய்வமகள்' தொடர்தான் எனது முதல் தொடர். அப்போது நடிப்பை பற்றி எதுவும் தெரியாது. முதல் தொடர் என்பதால் இரண்டு மாதம் வரை, நான் என்ன செய்கிறேன் என்பதே புரியாமல் இருந்தேன்.

பின்னர், மெதுவாக ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டு பேச தொடங்கினார்கள். எங்குச் சென்றாலும் "சுஜாதா.. சுஜாதா' என கேரக்டர் பெயரில் கூப்பிட்டார்கள். அப்போதுதான் சீரியலின் வீச்சு என்ன என்பது புரிய வந்தது. சரி நாமும் ஏதோ சாதனை புரிய ஆரம்பித்திருக்கிறோம் என்று தோன்றியது. அந்தத் தொடருக்குப் பிறகு தொடர்ந்து , "சுமங்கலி', "சந்திரலேகா', "ரோஜா' என வில்லி கதாபாத்திரத்தில்தான் நடித்து வருகிறேன்.

அதிலும் "சந்திரலேகா' தொடரில் மிக பயங்கரமான சைக்கோ போன்ற வில்லத்தனம் இருக்கும். "ரோஜா'வில் அப்படியே ஸ்டைலிஷ்ஷான வில்லி. இரண்டுமே வெவ்வேறு கோணத்தில் இருக்கும்.

இரண்டுமே நான் விரும்பி நடிக்கும் கதாபாத்திரங்கள்தான். அதே சமயம், தற்போது எங்குப் பார்த்தாலும், ரசிகர்கள் நிஜமாகவே திட்டுவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. ஏனென்றால், நிஜத்தில் நான் ரொம்ப அமைதியான பொண்ணுதான். கோபம் வந்தால் கூட அவ்வளவாக வெளிக்காட்டிக் கொள்ள மாட்டேன். அதனால் அடுத்து ஒரு பாஸிட்டிவான கதாபாத்திரம் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அனுவாக மாறிய அக்ஷயா!

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து வரும் தொடர் "ரோஜா'. இதில், பிரியங்கா நல்காரி நாயகியாகவும், சுப்பு சூரியன் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். இத்தொடரில் படுபயங்கர வில்லியாக அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷாமிலி. அவர் தற்போது திடீரென தொடரில் இருந்து

விலகியுள்ளார். அவர் கர்ப்பமாக இருப்பதால் தொடரில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அனு கதாபாத்திரத்திற்கு சன் டிவி தொகுப்பாளினி அக்ஷயா என்ட்ரி கொடுத்துள்ளார். இதன் மூலம் இனி அனு கதாபாத்திரத்தில் அக்ஷயாதான் நடிப்பார் எனத் தெரிகிறது. அதேசமயம், ஏற்கெனவே ஷாமிலியின் நடிப்பில் பழகிப்போன ரசிகர்கள் மத்தியில், அக்ஷயாவின் நடிப்பு எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com