கோஸ் தக்காளி சூப்
வாணலியில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனைப் போனதும், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், தக்காளி சேர்த்து வதக்கவும


தேவையானவை:
கோஸ் - கால் கிலோ
தக்காளி- 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பட்டை - 1
மிளகு, சீரகம், - தலா அரை தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது அரை தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனைப் போனதும், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின், தண்ணீர் விட்டு அடுப்பை "சிம்'மில் வைத்து, பத்து நிமிடம் கொதிக்க விடவும். வாசம் வந்ததும், இறக்கி வடிகட்டி, மிதமான சூட்டில் பரிமாறவும். காலையில் வெறும் வயிற்றில் பருகி வர, வயிறு புண் நீங்கும். மலசிக்கல் சரியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...