ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சேனைக்கிழங்கு குருமா 

சேனைக்கிழங்கை தோல் நீக்கி சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் ஒரு சத்தம் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.

News image
Updated On :15 மார்ச் 2021, 5:53 am

சுந்தரி காந்தி

சேனைக்கிழங்கு குருமா தேவையானவை:

சேனைக் கிழங்கு- 200 கிராம் 
1 வெங்காயம் -1
 மஞ்சள் தூள் -1/2 மேசைக்கரண்டி
 பச்சை மிளகாய்- 2
மல்லித்தூள்- 1 மே.க 
இஞ்சி  பூண்டு விழுது- 1  மே.க 
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
மல்லி இலை (விரும்பினால்)

அரைக்க:

தேங்காய்ப்பூ - 3 மேசைக்கரண்டி
கசகசா- 1 மேசைக்கரண்டி 
பெருஞ்சீரகம் (விரும்பினால்) - 1 மேசைக்கரண்டி
தாளிக்க தேவையானவை:
பிரியாணி இலை- 1 
பட்டை - 1 
ஏலக்காய்- 1 
கிராம்பு -1 

செய்முறை:

சேனைக்கிழங்கை தோல் நீக்கி சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் ஒரு சத்தம் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு மிருதுவாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். வேக வைத்த சேனைக் கிழங்கு மிளகாய் , மல்லித் தூள், மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின்  தேங்காய் விழுது, தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குறைவான தீயில் குருமாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வெளி வரும் வரை வேக விடவும். மல்லி இலை தூவி இறக்கிவிடவும்.  சேனைக் கிழங்கு குருமாவை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதமுடன் பரிமாறலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.