பார்லி வேர்க்கடலை சுண்டல்
ஒரு மணி நேரம் ஊற வைத்த பார்லி, வறுத்த வேர்க்கடலையை உப்பு சேர்த்து ஆவியில் வேக வைக்கவும்.


தேவையானவை:
பார்லி - ஒரு கிண்ணம்
வறுத்த வேர்க்கடலை - அரை கிண்ணம்
சீரகம், சோம்பு - தலா கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு
இஞ்சி துருவல் - அரை தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு மணி நேரம் ஊற வைத்த பார்லி, வறுத்த வேர்க்கடலையை உப்பு சேர்த்து ஆவியில் வேக வைக்கவும். எண்ணெய்யைச் சூடாக்கி, சீரகம், சோம்பு, பச்சை மிளகாய் தாளிக்கவும். இதனுடன் இஞ்சித் துருவல், வெந்த பார்லி, வேர்க்கடலை
சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்துமல்லி, (விருப்பப்பட்டால்) தேங்காய்த் துருவல் சேர்க்கவும்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...