கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோதுமை சுண்டல்

முளைகட்டிய கோதுமையை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும்.

News image
Updated On :8 அக்டோபர் 2021, 12:22 pm

ஏ. காந்தி

தேவையானவை: 

முளைகட்டிய கோதுமை - ஒரு கிண்ணம்
கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம் - தலா கால்  தேக்கரண்டி
இஞ்சித் துருவல் - ஒரு தேக்கரண்டி 
கீறிய பச்சை மிளகாய் - 2
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கிக் 
கொள்ளவும்)
வெங்காயம் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: 

முளைகட்டிய கோதுமையை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். வெந்த கோதுமை, உப்பு சேர்த்து, (விருப்பப்பட்டால்) தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும். டயாபடீஸ் உள்ளவர்களுக்கும் ஏற்ற சுண்டல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.