சிவப்பரிசி கதம்ப சாதம்

காய்களை நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தனியா, வத்தல், சீரகம், வெந்தயம், தேங்காய்த் துருவல் இவைகளை சிறிது எண்ணெயில் வறுத்து, ஆறியவுடன் மிக்ஸியிலிருந்து விழுதாக அரைத்து எடுக்கவும்.
சிவப்பரிசி கதம்ப சாதம்

தேவையான பொருள்கள்:

சிவப்பரிசி- அரை கிலோ வாழைக்காய்-1
முருங்கைக்காய்- பாதியளவு கத்திரிக்காய்-3
புடலங்காய்- சிறிய துண்டு கொத்தவரங்காய்- 10
பரங்கிக்காய்- சிறிய துண்டு
வெள்ளரிக்காய்- சிறிய துண்டு
துவரம் பருப்பு- 50 கிராம்
தனியா- 2 மேசைக் கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
வெந்தயம்- அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல்- 5
தேங்காய்த் துருவல்- கால் டம்ளர்
கறிவேப்பிலை, கடுகு- தாளிக்க
பெருங்காயத் தூள்- 2 சிட்டிகை
உப்பு,எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

காய்களை நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தனியா, வத்தல், சீரகம், வெந்தயம், தேங்காய்த் துருவல் இவைகளை சிறிது எண்ணெயில் வறுத்து, ஆறியவுடன் மிக்ஸியிலிருந்து விழுதாக அரைத்து எடுக்கவும். அரிசியையும் துவரம் பருப்பையும் ஒன்றாகச் சேர்த்து, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். பாதிபதம் வெந்ததும், நறுக்கிய காய்கள், புளி கரைசல், அரைத்த மசாலா விழுது, பெருங்காயத் தூள், உப்பு இவைகளைச் சேர்த்து தொடர்ந்து வேகவிடவும். கலவை பதமாக வெந்து கமகம வாசனை வந்தவுடன், கடுகு, கறிவேப்பிலை தாளித்திட்டு இறக்கவும். சிவப்பரிசி கதம்ப சாதம் தயார். இத்துடன் அப்பளம் பொரித்து வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். சத்துகள் நிறைந்த உணவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com