லச்சி பழமும் மனிதர்களின் குணமும்..!

வெளியில் இருந்து முரட்டுத்தனமாகத் தோற்றமளிக்கும் மக்கள் பெரும்பாலும் மிகவும் மென்மையான இதயம் கொண்டவர்கள் லிச்சிப் பழத்தை போன்றவர்கள்.
லச்சி பழமும் மனிதர்களின் குணமும்..!
Updated on
1 min read

வெளியில் இருந்து முரட்டுத்தனமாகத் தோற்றமளிக்கும் மக்கள் பெரும்பாலும் மிகவும் மென்மையான இதயம் கொண்டவர்கள் லிச்சிப் பழத்தை போன்றவர்கள். பலாப்பழம் என்று சொல்வதற்கு பதிலாக லிச்சிப் பழத்துடன் மனிதர்களின் குணத்தை ஒப்பிடலாம். 

பழம் மிகவும் சிறியதாகத் தோன்றினாலும், பெரும் நோய்களை போக்கும் திறன் கொண்டது.  பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், அது நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

உடல் பருமன், நீரிழிவு, பக்கவாதம், இதய நோய்,  அல்சைமர் ஆகியவற்றால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளைத் தடுக்க உதவுகிறது.

அற்புதமான ஊட்டச்சத்து மதிப்புகளைக் கொண்டுள்ளது, இதில் நல்ல அளவு நார்ச்சத்துகள், பி காம்ப்ளக்ஸ் உள்ளது, இது நமது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.  உடலுக்கு ரத்த உற்பத்திக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. இதில்  தேவையான மாங்கனீசு, மெக்னீசியம், தாமிரம், இரும்பு ஆகியவற்றை வழங்குகிறது.

லிச்சிப் பழத்தின் நன்மைகள் உண்மையிலேயே, வேறு எந்த பழத்துடன் ஒப்பிடமுடியாதது. முகத்தை அழகாக மாற்றும் திறன் லிச்சிக்கு உண்டு.  உடலின் செய்முறையை மந்தப்படுத்தும் பண்புகள் உள்ளன.  இது ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது. 

இது உடலுக்கு மிகவும் தேவையான வைட்டமின்களை வழங்குவதன் மூலம் தலைமுடிக்கு ஊட்டமளிக்கிறது. அழகுப்படுத்தும் செயல்முறைக்கு மட்டுமின்றி, இந்த அதிசய பழம் சேதமடைந்த சருமத்தை விரைவாக மீட்டெடுக்கும். லிச்சி போன்ற ஒரு சிறிய பழத்தில் எப்படி இவ்வளவு பொக்கிஷங்கள் எப்படி வந்தது என்று ஆச்ச்சரியம் ஏற்படுகிறது.

இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும்.  எனவே, லிச்சிப் பழம் சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை நோய் ஏற்படாது. ஏனென்றால், ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிப்பதால், ரத்தசோகை ஏற்படும் அபாயம் குறைகிறது.

உடல் எடையை  குறைக்கவும் உதவுகிறது. லிச்சி பழத்தில் நார்ச்சத்து,  நீர்ச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது. எனவே நம் உடலுள் சேரும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இந்த இனிப்புப் பழம் உதவுகிறது.

உடல் எடையைக் குறைக்க சிறந்த பழமான லிச்சி,  உடலுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கிறது. வளர்சிதை மாற்றமும் வலுப்பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com