மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பிரிஞ்சி இலையின் மகத்துவம்

தலைமுடியின் ஆரோக்கியத்துக்கும், அழகுக்கும் பயன்படுத்தப்படுகிறது.  இதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்புச்சத்து ஆகியன இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.

News image
Updated On :12 மார்ச் 2023, 12:30 am

கவிதா சரவணன்

தலைமுடியின் ஆரோக்கியத்துக்கும், அழகுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்புச்சத்து ஆகியன இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.

செரிமானத்தைச் சீராக்கி, செரிமான பிரச்னை வராமல் தடுக்கும். அதிலும், பிரிஞ்சி இலையை டீயில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், மலச்சிக்கல், குடலியக்கப் பிரச்னைகள் குணமாகும்.

டைப் 2 நீரிழிவுக்கு நல்லது. ரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரித்து இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும். எனவே, நீரிழிவு நோயாளிகள் இதனை உணவில் சேர்த்து வருவது நல்லது.

தொடர்ந்து பிரிஞ்சி இலையை சாப்பிட்டு வந்தால் முடி கொட்டுவதும் நிற்கும்.  இலையை நீரில் நன்கு வேக வைத்து,  ஆறியதும் தலையைக் கழுவினால் முடி உதிர்வது நிற்கும்.

இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதை சருமத்தில் எரிச்சல் உள்ளவர்கள் கழுவினால் எரிச்சல் போகும். 

இலையில் உள்ள ஆண்டி பாக்டீரியாக்கள் கிருமி தாக்கத்தில் இருந்தும் காக்கும். பிரியாணி இலையை கொதிக்க வைத்த நீருடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, தலையில் தேய்த்து வந்தால் பிரச்னை தீரும்.

சிறுநீரகப் பிரச்னைகள், சிறுநீரகக் கற்களைப் போக்க பிரிஞ்சி இலை பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு இலையை நீரில்போட்டு காய்ச்சி அதனை தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.