விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அவல் பாயசம்

பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருக்கி முந்திரி, திராட்சையை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

News image
Updated On :2 செப்டம்பர் 2023, 6:30 pm

கவிதா சரவணன்

தேவையான பொருள்கள் :

அவல் - ஒரு கிண்ணம்
காய்ச்சிய பால் - ஒரு கிண்ணம்
வெல்லத் தூள் - தேவையான அளவு,
ஏலக்காய்த் தூள் - சிட்டிகை
நெய் -  ஒரு தேக்கரண்டி
முந்திரி, திராட்சை - தலா 10

செய்முறை: 

பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருக்கி முந்திரி, திராட்சையை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே நெய்யில் அவலைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். அதே பாத்திரத்தில் தண்ணீர் சிறிதளவு விட்டு கொதிக்க விடவும். இதனுடன் அவலைச் சேர்த்து வேக விடவும். பிறகு பால், ஏலக்காய் த்தூள்,  வெல்லக் கரைசல் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். மேலே வறுத்த முந்திரி, திராட்சையைச் சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.