திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

முருங்கைக்கீரை பிரட்டல்

முதலில் பச்சரிசியை வெறும் சட்டியில் வறுத்துக் கொரகொரவெனப் பொடித்து வைக்கவும்.

News image

முருங்கைக்கீரை பிரட்டல்

Updated On :28 ஜூலை 2024, 12:10 pm

தேவையான பொருள்கள்:

முருங்கைக்கீரை - ஒரு கட்டு (ஆய்ந்துகொள்ளவும்)

பச்சரிசி - ஒரு கைப்பிடி அளவு

தேங்காய்த் துருவல் - தேவையான அளவு

கடுகு - அரை தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 5 (கிள்ளவும்)

வெங்காயம் (விரும்பினால்) - 2 (நறுக்கிக்கொள்ளவும்)

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் பச்சரிசியை வெறும் சட்டியில் வறுத்துக் கொரகொரவெனப் பொடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய மிளகாய் சேர்த்துத் தாளித்து, (விரும்பினால்) வெங்காயம் சேர்த்து வதக்கி, இத்துடன் கீரையைச் சேர்த்துக் கிளறி, தேவையான உப்பு சேர்க்கவும்.  சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும். வெந்ததும் தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கிளறவும்.  இதில் பச்சரிசிப் பொடியைத் தூவிக் கிளறி இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.