பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

புடலங்காய் அடை

புடலங்காய் அடை செய்வதற்கு முதலில் புழுங்கலரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கொள்ளு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்.

புடலங்காய் அடை

Published On :

தேவையான பொருள்கள் :

புடலங்காய் - 1

புழுங்கலரிசி, பச்சரிசி - தலா 2 கிண்ணம்

கடலைப் பருப்பு , துவரம் பருப்பு - தலா 1 கிண்ணம்

உளுத்தம் பருப்பு, பாசிப் பருப்பு - கால் கிண்ணம்

கொள்ளு - 4 மேசைக்கரண்டி

புதினா - கால் கிண்ணம்

நறுக்கிய சின்ன வெங்காயம் - 20

காய்ந்த மிளகாய் - 10

சீரகம் - 1 மேசைக்கரண்டி

தனியா - 4 மேசைக்கரண்டி

பெருங்காயம் - 2 சிட்டிகை

பூண்டு - 10 பல்

கடுகு - 1 மேசைக்கரண்டி

கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு , எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

புடலங்காய் அடை செய்வதற்கு முதலில் புழுங்கலரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கொள்ளு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், தனியா, பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு ரவை பதத்துக்கு அரைக்கவும். புடலங்காயைப் பொடியாக நறுக்கவும்.

பிறகு நறுக்கிய சின்ன வெங்காயம், புதினா, பொடியாக நறுக்கிய புடலங்காய், அதனுள்ளே இருக்கும் விதை, சதைப்பகுதி ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் அரைத்து வைத்துள்ள புடலங்காய் கலவையை சேர்த்து கெட்டியாக கலக்கவும்.

பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெயை தடவி, கலக்கி வைத்துள்ள மாவு கலவையில் இருந்து ஒரு கரண்டி மாவை எடுத்து மொத்தமாக ஊத்தப்பம் போல் ஊற்றி மூடி வேகவைக்கவும். ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, தோசையை சிவக்க வேகவிட்டு எடுக்கவும். சுவையான புடலங்காய் அடை தயார். இந்த அடையை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.