12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பேரிச்சம் பழ கோவா

பேரிச்சம் பழத்தை கொட்டையை எடுத்து விட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பேரிச்சம் பழ கோவா

Published On :

தேவையான பொருள்கள்:-

பேரிச்சம் பழம்- 1 கிண்ணம்

பால்கோவா - 1 கிண்ணம்

பால் பவுடர் - 1/2 கிண்ணம்

பால், உப்பு- சிறிதளவு

முந்திரி- 10

ஏலக்காய் -சிறிதளவு

நெய் - தேவையான அளவு

சர்க்கரை பவுடர் - 2 கிண்ணம்

செய்முறை:

பேரிச்சம் பழத்தை கொட்டையை எடுத்து விட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். முதலில் வாணலியில் சிறிது நெய் ஊற்றி கோவாவை வதக்கவும். பின்பு அதனுடன் நறுக்கிய பேரிச்சம் பழத்தை சேர்த்து கிளறவும். பின்பு அதனுடன் பால்பவுடரை சிறிது பாலில் கலக்கி அதில் விட்டு கிளறவும்.

இக்கலவையுடன் முந்திரி, ஏலக்காய், சர்க்கரை பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்கு சுண்டி வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும். நன்கு சுண்டி வந்தவுடன் வெண்ணெய் தடவிய தட்டில் கொட்டவும். சிறிது நேரம் ஆறியவுடன் வில்லைகளாக போடவும். ஒவ்வொரு வில்லையின் நடுவில் முந்திரியை வைத்து அலகரிக்கவும்.

நன்கு ஆறியவுடன் வில்லைகளை எடுத்து காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்துக்கொள்ளவும். தேவைப்படும் போது எடுத்து பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.