வரகு அரிசி- 2 கிண்ணம்
கடுகு, எண்ணெய், பெருங்காயம்- தேவையான அளவு
உளுந்து, கடலைப் பருப்பு- கால் மேசைக்கரண்டி
வெங்காயம்- 2
உப்பு, இஞ்சி, கருவேப்பிலை- சிறிதளவு
காய்ந்த மிளகாய்- 2
செய்முறை:
வரகு அரிசியை ரவையாக உடைக்கவும். இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு வரகு ரவையை வறுக்கவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மேற்கண்டவற்றை சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, நன்கு வதங்கியதும் நான்கு கிண்ணம் தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்தும் ரவையைக் கொட்டி, நன்றாகக் கிளறவும். நன்றாக வெந்ததும் கிளறி இறக்கவும். சுவையான வரகு அரிசி உப்புமா ரடி.