தேவையான பொருள்கள்:
சாதா தோசை மாவு- 4 கிண்ணம்
கடலை மாவு- 1 கிண்ணம்
பீட்ரூட், காரட்- துருவியது அரை
கிண்ணம்
வெங்காயம்- 2
கோஸ்- நறுக்கியது கால் கிண்ணம்
பச்சை மிளகாய்-5
கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சாதா தோசை மாவுடன் கடலை மாவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கலக்கவும். பின்னர், மாவில் துருவிய பீட்ருட், காரட், கோஸ், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
தோசைக்கல் சூடானவுடன் தோசையாக வார்த்து சுற்றிலும் எண்ணெய் விட்டு சிறிதுநேரம் மூடிவைத்து, நன்றாக வெந்ததும் திருப்பிப் போட வேண்டும். மீண்டும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.