தேவையானவை:
ஆய்ந்து, நிழலில் உலர்த்திய முருங்கை இலை - ஒரு கிண்ணம்
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
எள் - 2 தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
காய்ந்த மிளகாய் - 8
புளி - ஒரு கொட்டைப்பாக்கு அளவு,
பெருங்காயப் பொடி - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முருங்கை இலைகளை வெறும் வாணலியில் வறுத்து வைக்கவும். அதே வாணலியில் உளுத்தம் பருப்பு, எள், பூண்டு, காய்ந்த மிளகாயை ஒன்றன் பின்னர் ஒன்றாக வறுக்கவும். புளியைச் சுட்டு வைக்கவும். பிறகு அனைத்துப் பொருள்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, உப்பு, பெருங்காயப் பொடி சேர்த்துக் கலந்து வைக்கவும்.