அதிசய இரட்டையர்...

தூத்துக்குடியைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் படிப்பில் சாதனையைப் படைத்துள்ளனர்.
அதிசய இரட்டையர்...
Published on
Updated on
1 min read

ஒரே குரல், ஒரே நடை, உடை பாவனை... என அனைத்திலும் ஒன்றுபோல இருக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் படிப்பிலும் சாதனையைப் படைத்துள்ளனர்.

தூத்துக்குடி கோட்ஸ் நகரைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் அற்புதராஜ், சுய தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி ஷிபா ஜேம்ஸ் ஆசிரியை. இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள். கடைக்குட்டிகள் இருவரும் இரட்டையர்கள். பாலின் காருண்யா, இவாஞ்சலின் செüந்தர்யா இருவரும் 2007-இல் பிறந்தனர்.

பிறந்ததில் இருந்தே இவர்கள் ஒற்றுமையாக இருந்து வந்துள்ளதுடன், ஒரே மாதிரி உடை அணிவது, சாப்பிடுவது, விளையாடுவது, இசையை கற்றுகொள்வது ஆகியவற்றில் ஒரே மாதிரி பழக்க வழக்கத்துடன் இருந்து வருகின்றனர்.

ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், இவாஞ்சலின் செüந்தர்யா வலது கை பழக்கம் உடையவராகவும், பாலின் காருண்யா இடது கை பழக்கம் உடையவராகவும் உள்ளனர்.

தூத்துக்குடி ஏ.பி.சி. வீரபாகு மெட்ரிகுலேஷன் பள்ளியில் ப்ரீ.கே.ஜி. முதல் 12 -ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்துள்ளனர். இருவரும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல், இரண்டாவது ரேங் எடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் இவர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளனர்.

2023-இல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இரட்டையர் 485 மதிப்பெண்களை எடுத்ததுடன், கணக்கு, அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்களை எடுத்து பள்ளியில் சிறப்பிடம் பிடித்தனர்.

அதே சாதனை தொடரும் வகையில் தற்போது வெளியாகி உள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில் இரட்டையர் 585 மதிப்பெண்களைப் பெற்று, மீண்டும் சாதனை படைத்ததுடன் மாவட்ட அளவிலும் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

'ஆசிரியர்கள், பெற்றோர் துணையுடன் வெற்றி கிட்டியது. சென்னையில் கல்லூரியில் சேர்ந்து கணினி அறிவியல் பாடப் பிரிவைப் படிக்க உள்ளோம்' என்றனர் அவர்கள்.

-ஒய்.டேவிட் ராஜா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com