ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

உருளைக்கிழங்கு குலோப் ஜாமூன்

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, மசித்து, பொடித்த சர்க்கரை, பால் பவுடர் சேர்த்து கட்டியில்லாமல் பிசையவும்.

News image

உருளைக்கிழங்கு குலோப் ஜாமூன்

Updated On :11 ஏப்ரல் 2026, 10:40 pm

தேவையான பொருள்கள்:

உருளைக்கிழங்கு - கால்கிலோ,

பால் பவுடர் - 3 மேஜை கரண்டி,

பொடித்த சர்க்கரை -3 மேஜை கரண்டி,

சர்க்கரை - அரை கிண்ணம்,

ஏலத்தூள், ரோஸ் எசன்ஸ், எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, மசித்து, பொடித்த சர்க்கரை, பால் பவுடர் சேர்த்து கட்டியில்லாமல் பிசையவும். பிறகு 10 நிமிடங்கள் வைத்திருந்து மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் உருண்டைகளாகப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சர்க்கரைப் பாகு வைத்து ரோஸ் எசன்ஸ், ஏலத்தூள் கலந்து உருண்டையை அதில் போட்டுவிடவும். அரை மணி நேரம் ஊறியதும் உருளைக்கிழங்கு குலோப்ஜாமூன் தயார்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.