பாபு ரெடி!
பாபுவுக்கு இன்டர்வியூ முடிந்து விட்டதா என்று மும்பையிலிருந்து அவனது சித்தப்பா அடிக்கடி போன் பண்ணிக் கேட்டுக் கொண்டிருந்தார். இன்டர்வியூ முடிந்த உடனே சீட் எப்படியாவது வாங்கிட மாமா முடிவு செய்தார். சிபா


பாபுவுக்கு இன்டர்வியூ முடிந்து விட்டதா என்று மும்பையிலிருந்து அவனது சித்தப்பா அடிக்கடி போன் பண்ணிக் கேட்டுக் கொண்டிருந்தார். இன்டர்வியூ முடிந்த உடனே சீட் எப்படியாவது வாங்கிட மாமா முடிவு செய்தார். சிபாரிசுக்கு நகர தலைவரிடமும், அந்தப் பகுதி எம்.எல்.ஏ.விடமும் இரவோடு இரவாக பேசி முடித்து விட்டாயிற்று. பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை முடித்து விடு என்று மதுரையிலிருந்த இன்னொரு மாமா ஏ.டி.எம். கார்டையே கொடுத்து அனுப்பி இருந்தார்.
இன்டர்வியூ நல்லபடியாக முடிய வேண்டுமென்று சாமிக்கிட்டே வேண்டிக் கொள்வதாக கிராமத்திலிருக்கிற தாத்தா, பாட்டி போன் பண்ணியிருந்தார்கள். எப்படியும் பாபு செலக்ட் ஆகிவிடுவான் என்ற நம்பிக்கைக்கு காரணம் செலக்ஷன் கமிட்டியில் முக்கியமான நபரை கவனித்தாகி விட்டது.
""இன்டர்வியூ போகும் போது சித்தப்பா, சித்தி கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டுப் போ'' என பாபுவிடம் கூறினார் அவனது அம்மா.
பாபு "டிப்-டாப்'பான உடையும், மிடுக்கான தோற்றமும் இன்டர்வியூவில் நம்பர் ஒன்னாக செலக்ட் ஆக வைத்தது. இன்டர்வியூ ஹாலுக்கு வெளியே பாபுவின் அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, மாமா, அடுத்த வீட்டு அத்தை என்று ஒரு பட்டாளமே காத்திருந்தது.
பாபு செலக்ட் ஆகிவிட்ட சந்தோஷத்தில் அனைவருக்கும் இனிப்புக் கொடுத்தான். பாபுவுக்கு கோவையிலிருந்து இன்னொரு சித்தப்பா ஷூ செட்டையும், காஸ்ட்லியான டிரஸ்ûஸயும் அனுப்பி இருந்தார்.
""கண்டதை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்ளாதே!'' என்று அண்டை வீட்டு அக்கா அட்வைஸ் செய்தார். யுனிவர்சிட்டியில் முக்கியப் பதவியிலிருந்த பெரிய மாமா தான் வழியனுப்பதலுக்கு வர முடியாதபடி "கான்பரன்ஸ்' இருப்பதாகவும், பாபுவை வருத்தப்பட வேண்டாமென்று' என்று தனது இ-மெயில் செய்தி மூலம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.
ஸ்போர்ட்ஸ் பொருள்கள் வாங்கி தரும்படியான பொறுப்பை, அப்பாவின் நெருங்கிய நண்பர் எடுத்துக் கொண்டார். டெய்லர் கடையிலிருந்து டிரஸ்ஸஸ் எல்லாம் காரில் வந்திறங்கியது.
பாபுவை வழியனுப்பி வைக்க யாரெல்லாம் வருவார்களோ, அவர்களுக்காக காலை டிபனுக்கு வேண்டிய உணவுகளை பாபுவின் அம்மா ஓடி ஓடி தயார் பண்ணிக் கொண்டிருந்தார். பாபுவின் நெருங்கிய நண்பர்கள் எல்லாரும் வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மும்பை சித்தப்பாவின் செல்போன் சிணுங்கியது. ""இரவு ஃபிளைட்டில் ஏறி காலை 6 மணிக்கெல்லாம் வீட்டில் இருப்பேன்'' என்றார் மும்பை சித்தப்பா.
அன்று இரவே ஏறக்குறைய எல்லா சொந்தங்களும் வந்து விட்டிருந்தார்கள். முக்கியமானவர்கள் காரிலும், ரயில் மூலமாகவும் வந்தனர். வீடே அமர்க்களப்பட்டது. ஹாலில் தாத்தா, பாட்டி மற்றும் அம்மாவின் உறவினர்கள் என எல்லோரும் வீட்டில் இருந்தனர். காலை டிபன் கமகமக்க சாப்பிட்ட பின் ஹாலில் எல்லோரும் கொண்டு வந்திருந்த "கிப்ட் பாக்ûஸ' ஒவ்வொருவராக பாபுவிடம் கொடுத்தார்கள்.
பாபு டிரஸ் பண்ணிக் கொண்டு ரெடியாக இருந்தான். காலை எட்டு மணி ஆனதும், இன்னும் வரலியா என்று அம்மா சைகையால் கேட்டு எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். இதோ வாகனம் வந்து விட்டது.
வரிசையாக எல்லோரும் பாபுவின் கையைக் குலுக்கி, கன்னத்தைக் கிள்ளஇ, கண்கலங்க ஆசீர்வதித்து வழியனுப்ப, பாபுவை ஏற்றிக் கொண்டு வாகனம் நகர, பாபு எட்டிப் பார்த்து எல்லோருக்கும் டாட்டா சொல்ல, வந்திருந்த எல்லோருடைய கைகளும் அசைந்து வழியனுப்பி வைத்தன.
பாபுவின் உறவினர், நண்பர்களுடன் அந்தத் தெருவில் உள்ள ஜனங்கள் எல்லோரும் எல்.கே.ஜி., படிக்க பாபுவின் ஸ்கூல் வேனில் போவதையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக பள்ளியில் "எல்.கே.ஜி.' படிக்கச் சென்ற பாபுவின் முதல் நாள் அமர்க்களம் முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...