/

பறவையைத் தொடர்வோம்...

சின்ன நீர்க் காகம் சின்ன நீர்க் காகம், கடல் பறவை இனத்தைச் சேர்ந்தது. சற்றே சிறிய பறவை. இந்தியாவில் பரவலாகக் காணப்படும் பறவை. ஜாவா தீவுகள் வரை இந்தப் பறவையைப் பார்க்கலாம். பர்மா, தாய்லாந்து, ஸ்ரீலங்கா,

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:02 am

அபி

சின்ன நீர்க் காகம்

சின்ன நீர்க் காகம், கடல் பறவை இனத்தைச் சேர்ந்தது. சற்றே சிறிய பறவை. இந்தியாவில் பரவலாகக் காணப்படும் பறவை. ஜாவா தீவுகள் வரை இந்தப் பறவையைப் பார்க்கலாம். பர்மா, தாய்லாந்து, ஸ்ரீலங்கா, வங்காள தேச நாடுகளிலும் இந்தப் பறவைகள் உள்ளன.

தனியாகவோ குழுக்களாகவோ சிறிய குளங்களிலும் ஏரிகளிலும் கடற்கரையோரங்களிலும் காணப்படும். சிறகை விரித்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

உடல் முழுவதும் கருப்பு நிறத்தில் இருக்கும். கழுத்தின் கீழ்ப்பகுதியில் மற்றும் சற்றே வெள்ளையாக இருக்கும்.

50 செ.மீ. நீளம் இருக்கும். நீண்ட கூர்மையான அலகைக் கொண்டிருக்கும். அலகின் நுனி சற்றே வளைந்து கொக்கி போல இருக்கும்.

நீருக்கு அடியில் நீந்திச் சென்று மீன்களைப் பிடித்துச் சாப்பிடும். நீரில் நீந்துவதற்கு வசதியாக இதன் பாதங்கள் வாத்தின் பாதங்களைப் போன்ற அமைப்பில் இருக்கும்.

ஆணும் பெண்ணும் சேர்ந்து மரக்கிளைகளில் கூடு கட்டும். கூட்டைக் கட்டி முடிக்க இரண்டு வாரங்கள் ஆகும். ஒருமுறைக்கு 2 முதல் 6 முட்டைகள் வரை இடும். குஞ்சு பொறிப்பதற்கு 15 முதல் 21 நாட்கள் ஆகும். ஒரு மாதம் ஆனபிறகு குஞ்சுகள் கூட்டைவிட்டு வெளியேறி விடும்.

கொண்டை நீர்க் காகம்

இதுவும் சின்ன நீர்க் காகம் வகையைச் சேர்ந்ததுதான். ஏறக்குறைய அதே போல இருக்கும். கொல்கத்தா மற்றும் மேற்கு வங்காளத்தில் அதிகம் காணப்படும் பறவை இனம். தாய்லாந்து மற்றும் கம்போடியாவிலும் இந்தப் பறவை உண்டு.

இதன் கண்கள் நீல நிறத்தில் இருக்கும். சிறிய தலையுடன் வளைந்த முன்நெற்றி மட்டும் குறுகிய நீண்டு வளைந்த அலகைக் கொண்டிருக்கும்.

51 செ.மீ. நீளம் இருக்கும். வெண்கலப் பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும் பறவை. தலை வழுக்கையாக இருக்கும். நீர் நிலைகள் உள்ள பகுதியில் வசிக்கும். மீன்தான் உணவு. இதன் கூட்டில் பல அடுக்குகள் இருக்கும். ஒருமுறைக்கு 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். முட்டைகள் சற்றே வெளிர் நீலம் மற்றும் பச்சை கலந்த வண்ணத்தில் இருக்கும். நீருக்குள் டைவ் அடித்து மீன் பிடிப்பதைப் பார்க்க அழகாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.