/

பறவையைத் தொடர்வோம்...

கருவாள் வாத்து 56 செ.மீ. வரை நீளம் இருக்கும். எடை 990 கிராம். ஆண் பறவை சாம்பல் நிறத்தில் இருக்கும்.

News image
Updated On :19 அக்டோபர் 2012, 9:12 am

அபி

செண்டு வாத்து

வாத்து இனத்தைச் சேர்ந்தது இந்த செண்டு வாத்து. தலையில் செண்டு வைத்தது போல இருப்பதால் இந்தப் பெயர். இருண்ட சாம்பல் நிறத்தில் இருக்கும். அலகின் மேல் ஒரு செண்டு இருக்கும். சற்றே பெரிய பறவை. உடம்பின் மேல் பகுதிகள் கருப்பு, பழுப்பு, சாம்பல் நிறங்கள் கலந்து இருந்தாலும் கீழ்ப்பகுதி வெண்மையாக இருக்கும். பெண் பறவைக்கு அலகில் செண்டு இருக்காது. தென் அமெரிக்காவில் அதிகம் காணப்படும்.

உலகில் மற்ற பகுதிகளில் ஆங்காங்கே காணப்படும்.

56 முதல் 76 செ.மீ. வரை நீளம் இருக்கும். எடை 2.6 கிலோ வரை இருக்கும்.

குள்ள வாத்து

மிகவும் சிறியதாக இருப்பதால் குள்ள வாத்து என்ற பெயர். பாகிஸ்தான், இந்தியா, வங்காள தேசம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் ஆஸ்திரேலியாவிலும் இந்த வாத்தைக் காணலாம்.

26 செ.மீ. நீளம் இருக்கும். எடை 160 கிராம். பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கும். சிறிய அலகைக் கொண்டிருக்கும். கரும்பச்சை நிறத்தில் சிறகுகள் இருக்கும். தலை உருண்டு காணப்படும். மிகச் சிறிய கால்கள். பறக்கவும் செய்யும். மரப் பொந்துகளில் கூடு கட்டி வசிக்கும். ஒரு சமயத்தில் 8 முதல் 15 முட்டைகள் வரை இடும்.

நீர் நிலைகள், வயல்வெளிகளில் காணப்படும். தண்ணீர்ப் பூச்சிகள், சிறிய மலர்கள் ஆகியவற்றை விரும்பிச் சாப்பிடும்.

கருவாள் வாத்து

கருவாள் வாத்து 56 செ.மீ. வரை நீளம் இருக்கும். எடை 990 கிராம். ஆண் பறவை சாம்பல் நிறத்தில் இருக்கும். சிறகுகள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் அதிகம் காணப்படும் பறவை.

நீர் நிலைகளிலும் புல்வெளிகளிலும் அதிகம் வசிக்கும். சிறிய பூச்சிகளையும் மீன்களையும் விரும்பிச் சாப்பிடும்.

நீர்ப்பறவை இனத்தைச் சேர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.