பறவையைத் தொடர்வோம்...
வால் காக்கை காகம் இனத்தைச் சேர்ந்தது என்றாலும் மிகவும் வித்தியாசமான பறவை வால் காக்கை. இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் அதிகம் காணப்படும் பறவை. சிறிய வளைந்த உறுதியான அலகைக் கொண்டிருக்கும். நீண்ட ச


வால் காக்கை
காகம் இனத்தைச் சேர்ந்தது என்றாலும் மிகவும் வித்தியாசமான பறவை வால் காக்கை. இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் அதிகம் காணப்படும் பறவை. சிறிய வளைந்த உறுதியான அலகைக் கொண்டிருக்கும். நீண்ட சாம்பல் நிற வால். தலை கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும். உடல் முழுவதும் தங்கப் பழுப்பு நிறத்தில் பார்ப்பதற்கு மிகவும் அழகான பறவை. இதன் குரலும் மிகவும் இனிமையானது. வயல்வெளிகளிலும் காடுகளிலும் கிராமப்புற தோட்டங்களிலும் காணப்படும். சிறிய பழங்கள், விதைகள் மற்றும் புழு பூச்சிகளை விரும்பிச் சாப்பிடும்.
ஒரு சமயத்தில் 3 முதல் 5 முட்டைகளை இடும்.
காகத்தைப் போலவே இதுவும் செத்த பிராணிகளையும் சாப்பிடுவதால் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்க இப்பறவையும் உதவுகின்றது.
வெள்ளை வயிற்று வால் காக்கை
வெள்ளை வயிற்று வால் காக்கையும் காகம் இனத்தைச் சேர்ந்ததுதான். வயிற்றுப் பகுதி மட்டும் பஞ்சு போல வெண்மை நிறத்தில் இருப்பதால் இந்தப் பெயர். இந்தப் பறவையைத் தென் இந்தியாவில் அதிகம் பார்க்கலாம். தலைப் பகுதி கருப்பாகவும் உடலில் சிறகுகள் கருப்பும் பழுப்பும் கலந்து காணப்படும். அடர்வனங்களில் இப் பறவையைக் காணலாம்.
இதுவும் காகத்தைப் போல பல பறவைகளைக் கூப்பிட்டுச் சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டது.
இதன் முட்டைகள் சாம்பல் நிறத்தில் வெளிர் பச்சை நிறம் கலந்து காணப்படும்.
அண்டங் காக்கை
காகத்துக்கும் அண்டங்காக்கைக்கும் வித்தியாசம் எளிதாகத் தெரியாது. ஆனால் காகம் சற்றே மெல்லிய உடலைக் கொண்டிருக்கும். அண்டங்காக்கை தடித்த முரட்டு உருவத்தைக் கொண்டிருக்கும். முழுவதும் கருப்பாக இருக்கும். இதன் மூக்கு காகத்தினுடையதை விட சற்றே பெரிதாக இருக்கும். கால்களும் தடித்து இருக்கும்.
இந்தியா, பர்மா மற்றும் ஸ்ரீலங்காவில் அதிகம் இதைப் பார்க்கலாம். காகத்தைப் போலவே குணங்களைக் கொண்டது. குரல் மிகவும் கரகரப்பாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...