ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சந்தை

சந்தை கூடும் இடத்தினிலேசப்தம் மிகுந்தே கேட்கிறது!

News image
Updated On :21 பிப்ரவரி 2014, 2:50 am

புலேந்திரன்

 சந்தை கூடும் இடத்தினிலே
 சப்தம் மிகுந்தே கேட்கிறது!
 வந்தும், போயும் பெருங்கூட்டம்
 வாயில் நிரம்பி வழிகிறது!
 
 விலையைக் கூறி விற்போரும்
 விலையைக் குறைத்தே கேட்போரும்
 பலத்த ஓசை சந்தைக்குள்
 பலவித பொருட்கள் வரிசையிலே!
 
 காய்கறிக் கடைகள் ஒருவரிசை!
 கனிகள் நிறைந்த ஒருவரிசை!
 பாய்கள், முறங்கள் ஒருவரிசை!
 பாத்திரக் கடைகள் ஒருவரிசை!
 
 புஞ்சைத் தானியம் ஒருவரிசை!
 பொம்மைக் கடைகள் ஒருவரிசை!
 வண்ணத் துணிகள் ஒருவரிசை!
 வளையல், மணிகள் ஒருவரிசை!
 
 பாங்காய் இருக்கும் வரிசைகளில்
 பலவும் இன்னும் பார்த்திடலாம்!
 வேண்டும் பொருளை வாங்கிடலாம்
 விலையும் மலிவு சந்தையிலே!
 

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.